மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் லோகேஷ். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக்கை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் வெளியானது. அப்படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றது. மேலும் கைதி படத்தின் வெற்றியின் மூலம் அவருக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் மற்றும் லோகேஷ் இணைந்த மாஸ்டர் படமும் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

இந்நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக மாறியுள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி போன்ற திரைப்படங்கள் கமர்ஷியல் படங்களுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டதாக இருந்தன. பாடல்கள், நாயகி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முயற்சியில் உருவான மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றன.

Advertisement

அடுத்து விஜய்யுடனா ? :

இதைத்தொடர்ந்து இவர் தளபதி விஜய்யுடன் இணையப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக லோகேஷின் மாஸ்டர் திரைப்படம் அமைந்தது. விஜய்க்கு ஏற்றாற்போல சிறந்த கமர்ஷியல் படமாக கொடுத்து வெற்றி கண்டார் லோகேஷ் கனகராஜ். மேலும் இப்படம் கொரோனா காலகட்டத்தில் திரையில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் வெற்றி :-

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அரசியல் BIGG BOSS என்று பிசியாக இருந்ததால் .நான்கு ஆண்டுகள் ஆண்டவரை திரையில் காணமலும், லோகேஷ் கமலின் தீவிர பக்தன் என்பதாலும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் திரைப்படமும் அமைந்தது. அனிருத்தின் இசையில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிர்கர்களின் அமோக வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் காரணமாக இப்படத்தை தயாரித்து நடித்த உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியடைந்தார். அதை தெரிவிக்கும் வண்ணம் லோகஷ்க்கு காரை பரிசளித்தார்.

Advertisement

தளபதி 67 :-

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். தற்போது அவர் அதன் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் இருக்கும்.

Advertisement

சல்மான்கானை வைத்து படம் எடுக்கும் லோகஷ் கனகராஜ் :-

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பாலிவுட் நடிகரான சல்மான் கானை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளதாகவும், அக்கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே விரைவில் லோகேஷ் கனகராஜ் சல்மான் கானை இயக்கவுள்ளார் எனவும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கு முன்பே லோகேஷ் பாலிவுட் செல்கின்றாரா இல்லை தளபதி 67 படத்தை இயக்கிவிட்டு செல்கின்றாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள்.

Advertisement