நான் அதிபுத்திசாலியோ, தலை சிறந்த இயக்குனரோ கிடையாது - லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம்

By subhashini · 15/7/2025

தன்னை பற்றி சஞ்சய் தத் சொன்ன விமர்சனங்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கிறார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சஞ்சய் தத். இவர் பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சஞ்சய் தத் குறித்த தகவல்:

இவர் நடிகர் மற்றும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் என்பது காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது யாஷ் நடிப்பில் கன்னட மொழியில் வெளியாகி இருந்த கேஜிஎஃப் படத்தின் மூலம் தான். அந்த படத்தில் சஞ்சய் தத் அவர்கள் அதிரா கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இந்த படத்தின் மூலம் இவர் இந்தியா முழுவதுமே பிரபலமானார்.

சஞ்சய் தத் பேசியது:

அதற்கு பிறகு தான் இவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் வந்தது. அதனை அடுத்து இவர் விஜயின் நடிப்பில் லியோ படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரியளவு ஸ்கோப் கிடைக்கவில்லை. இதை எடுத்து தற்போது இவர் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கே.டி. தி டெவில்' படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஷில்பா ஷெட்டி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தையுமே தயாரித்து இருக்கிறது.

லோகேஷ் பற்றி சொன்னது:

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனும் பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. மேலும், இப்படத்துடைய டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சஞ்சய் தத், நான் லோகேஷ் கனகராஜ் மீது நிறைய கோபத்தில் இருக்கிறேன். அவர் எனக்கு லியோ படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தை கொடுக்கவே இல்லை. அவர் என்னை ரொம்பவே வீணடித்து விட்டார் என்று கூறி இருந்தார். இது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ், மேடையில் சஞ்சய் தத் பேசிய உடனே எனக்கு போன் செய்து பேசினார்.

https://www.youtube.com/watch?v=rKhG5-xg440

லோகேஷ் பதிலடி:

அப்போது அவர் நான் வேடிக்கையாக பேசிய ஒரு விஷயத்தை மக்கள் திணித்து, வெட்டி ஒட்டி சோசியல் மீடியாவில் பதிவிட்டு விட்டார்கள். அதை பார்ப்பதற்கு ரொம்பவே அருவருப்பாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது என்று சொன்னார். உடனே நான், அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை நான் என்று சொன்னேன். நான் அவருடைய கதாபாத்திரத்தில் தவறு செய்திருக்கலாம். தவறே செய்யாமல் இருக்க நான் ஒரு தலை சிறந்த இயக்குனரோ, அதிபுத்திசாலியோ கிடையாது. நான் என்னுடைய படங்களில் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால், எல்லாமே எனக்கு பாடம் தான். சஞ்சய் தத்துடன் நான் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் வேலை பார்ப்பேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full