'மாநகரம்' படத்தில் ஸ்ரீ பெயர் இது தான் - பல வருடங்களுக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ்

By subhashini · 3/9/2025

மாநகரம் படம் குறித்த சில சுவாரசிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான படம் மாநகரம். இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீ, சந்திப் கிஷன், ரெஜினா, சார்லி, முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. சென்னைக்கு ஸ்ரீ வேலை தேடி வருகிறார். ரெஜினாவின் பின்னால் காதலிக்க சொல்லி சந்திப் கிஷன் சுற்றுகிறார். கேப் ஓட்டுநர் சார்லி, பெரிய தாதா மதுசூதனன் ராவ், குட்டி தாதா அருண் அலெக்சாண்டர்.

மாநகரம் படம்:

இவர்களுடைய வாழ்க்கையில் தனித்தனியே நடக்கும் சில நிகழ்வுகள், கடைசியில் ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுகிறது. அது விபரீதமாகி எப்படியெல்லாம் சென்று முடிகிறது என்பதுதான் படத்தினுடைய கதையே. மேலும், இந்த படத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கு பெயர் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற லோகேஷ் கனகராஜ் இடம் மாநகரம் படத்தில் நடிகர் ஸ்ரீ-யினுடைய பெயர் என்ன? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

லோகேஷ் சொன்னது:

அதற்கு லோகேஷ், அந்த படத்தில் அவருக்கு பெயர் இல்லை. ஆனால், ஸ்கிரிப்ட் எழுதும்போது பரணி என்று பெயர் வைத்திருந்தேன். நான் வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு கேப் டிரைவருடன் பயணம் செய்தேன். அவருடைய பெயர் எனக்கு தெரியாது. சில தினங்கள் கழித்து அவர் வரவும் இல்லை. அப்போது அவர் பெயர் எனக்கு தேவைப்பட்டது. நான் என்னுடைய செல்போனில் அவருடைய பெயரை கேப் டிரைவர் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். அதை போன்று தான் மாநகரம் படத்தையும் எடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

கூலி படம்:

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில்உபேந்திரா, ரச்சிதா ராம், நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் வாரி குவித்து வருகிறது. இதுவரை இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full