வினோத், அட்லீ, நெல்சன்லாம் லோகேஷ பாத்து கத்துக்கோங்க - அட்வைஸ் செய்யும் ரசிகர்கள். காரணம் இந்த வீடியோ தான்.

By Arun · 25/5/2022

'லோகேஷ் கனகராஜ் இடம் கத்துக்கோங்க' என்று வினோத், நெல்சனை நெட்டிசன்கள் தாறுமாறாக வறுத்து எடுத்து வரும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இவர் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

https://twitter.com/ManithaAjith/status/1528897012954828800

இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

விக்ரம் படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் பட்டத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்திருக்கிறார்கள். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

https://twitter.com/VkMurugan16/status/1528758546786967552

லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி:

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் திரைப் பயணம் குறித்து கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தது, நான் துணை இயக்குனராக இருந்து தான் மாநகரம் படத்தை எடுத்தேன். இன்னும் அந்த படத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. அதேபோல் கைதி படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கலாம். மாஸ்டர் படத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாக ஸ்கிரிப்டை எழுதி இருக்கலாம் என்று தோன்றியது.

https://twitter.com/vjantony19/status/1528775677259812864

வைரலாகும் லோகேஷின் வீடியோ:

ஆனால், விக்ரம் படத்தில் இப்போது நன்றாக பண்ணியிருக்கிறோம். பத்து வருடம் கழித்து தான் இந்த கதையில் இந்த மாற்றம் செய்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதனால் முடிந்தவரை விக்ரம் படத்தில் எல்லோரும் நன்றாக பண்ணியிருக்கிறார்கள் என்று தன் அடக்கமாக லோகேஷ் கனகராஜ் பேசி இருந்தார். இப்படி தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜின் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் நெல்சன் மற்றும் வினோத்தை தாறுமாறாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

https://twitter.com/BiscuitKudu/status/1528934302905696256

நெல்சன்-வினோத்தை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்:

ஏன்னா, வலிமை படம் வந்திருந்தபோது வினோத் அவர்கள் படத்தை ஆடியன்ஸுக்கு பார்க்கத் தெரியவில்லை என்று கூறியிருந்தார். விஜய்யின் பீஸ்ட் படம் வெளிவந்து இருந்தபோது நெல்சன் அவர்கள் இன்றைக்கு இந்த படம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள், நாளைக்கு வேறு ஒரு நடிகரின் படம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதனால் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளக் கூடாது என்று பேசியிருந்தார். ஆனால், இரண்டு பேரின் படமுமே பக்கா பிளாப் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வினோத், நெல்சன் கூறிய கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் சிலர் லோகேஷிடம் இருந்து தன்னடக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அறிவுரை கூறி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full