'என்னதிது ஹ ஹான்' ஸ்ருதி ஹாசனுடன் மேட்ச் பார்க்க சென்ற லோகேஷ் கனகராஜை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

By Arun · 23/3/2024

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோதியது. சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி பெங்களூரு 20 ஓவர்களில் முடிவில் 173/6 ரன்கள் எடுத்து இருந்தது.

https://twitter.com/biggbosstwts/status/1771519517413265808?s=48

இதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரிலேயே 172/4 ரன்கள் எடுத்து இந்த சீஸனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 37 ரன்களையும், சிவம் துபே 34 ரன்களையும் அடித்து இருந்தனர். முதல் போட்டியிலேயே சென்னை அணி வெற்றி பெற்றதால் சென்னை அணியினர் உற்சாகத்தில் திளைத்தனர்.

இந்த போட்டியை காண ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். முக்கியமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவுடன் வந்து இருந்தார். அதே தனுஷ், அஜித் மனைவி ஷாலினி, காமெடி நடிகர் சதிஷ், பரத் போன்ற பலர் வந்து இருந்தனர். ஆனால், இவர்களை விட லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் வந்து இருப்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

https://twitter.com/thalapathyvjuk/status/1771476545267253396?s=48

கடந்த மாதம் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜூம் இணைந்து பணியாற்றி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இருவரும் கூட்டணியில் படம் உருவாகிறதா? என்றுஎதிர் பார்த்தனர். தற்போது இது தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி இருந்தது.

அதாவது, ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் ஹீரோவாக லோகேஷ் களமிறங்கி இருப்பது ஆச்சரியம் தான். இந்த பாடலை ஸ்ருதிஹாசனை கம்போஸ் செய்திருக்கிறார். இனிமேல் என இந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலின் வரிகளை கமலஹாசன் எழுதி இருக்கிறார்.மேலும், இந்த பாடலை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

இந்த பாடல் வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த பாடலின் டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த டீசரில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் பயங்கரமாக ரொமான்ஸ் செய்து இருக்கிறார்கள். இதனை கண்ட பலரும் ஷாக் ஆகி போனார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ipl போட்டியை காண சென்று இருந்தது சமூக வலைதளத்தில் பேசி பொருளாகி பலரும் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full