இது மிடில் கிளாஸ் வாழ்க்கையை எளிமையாக கனக்ட் செய்யும் - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குனர் லோகேஷ்

By subhashini · 15/6/2025

மெட்ராஸ் மேட்னி படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் காளி வெங்கட். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது காளி வெங்கட் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மெட்ராஸ் மேட்னி.

இந்த படத்தை கார்த்திகேயன் மணி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி, ஷெல்லி நபு குமார், ராமர், ஜியார்ஜ் மரியன், சுனில், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மிடில் கிளாஸ் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தை பாராட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கும் காணொளி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெட்ராஸ் மேட்னி படம்:

அதில் அவர், நான் மெட்ராஸ் மேட்னி படம் பார்த்தேன். ரொம்ப சிறப்பாக இருக்கிறது. எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. இதற்கு முன்னாடி இருந்த காளி வெங்கட் அண்ணனுடைய படங்கள் பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் ரொம்ப பிடிக்கும். கூலி படம் மூலமாக தான் அவருடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த படத்தில் காளி அண்ணா அருமையாக நடித்திருக்கிறார். சத்யராஜ் சார் மட்டும் இல்லாமல் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by FilmiFriday ™ (@filmifriday)

லோகேஷ் சொன்ன விஷயம்:

மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்த எல்லோருமே இந்த படத்தை எளிதாக கனெக்ட் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். எனக்கும் அப்படித்தான் இருந்தது. கடைசி காட்சி, எல்லோரும் எப்போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம் என்று கேட்கும் காட்சி தான். ஆங்காங்கே நமக்கு கனெக்ட் ஆகும் விஷயமாக இருந்தது. படத்தினுடைய இயக்குனர் கார்த்திகேயன், தயாரிப்பாளர், படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியார்ஸ் எல்லோருக்குமே என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கதைக்களம்:

படத்தில் சத்யராஜ் ஒரு எழுத்தாளர். அவர் எப்போதுமே எலேட் லெவலில் தான் யோசித்து கதை எழுதி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண், சாதாரண மக்கள் பற்றி கதை எழுதுங்கள். அதுதான் பெரிய ரீச் கிடைக்கும் என்று அவருக்கு அறிவுரையை சொல்கிறார். அதை ஏற்ற சத்யராஜ், ஒரு பாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவர் கதையை கேட்கிறார். காளி வெங்கட் ஒரு ஆட்டோ ட்ரைவர். அவர் தினமும் ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன்னுடைய மகன், மகளை படிக்க வைக்கிறார். இதில் காளி வெங்கட்டின் மகளாக ரோஷனி இருக்கிறார்.

இவர் படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். பின் அவருடைய திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று காளி வெங்கட் நினைக்கிறார். அதே நேரத்தில் மகன் இன்ஜினியரிங் படிக்கிறார். அவரை படிக்க பணம் வேண்டும் என்று காளி வெங்கட் போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் காளி வெங்கட் குடிக்க பாருக்கு சென்று இருக்கிறார். எதனால் இவர் பாருக்கு வந்தார்? அவருடைய குடும்பத்தின் நிலை என்ன? தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தாரா? மகனை படிக்க வைத்தாரா? சத்யராஜுக்கும் காளி வெங்கடுக்கும் இடையே என்ன நடந்தது? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full