மாசக்கடைசியில இவன் தான் சோறு போடுவான் - ஹோட்டல் வைத்திருக்கும் தன் நண்பனுடன் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்.

By Ajju · 11/3/2022

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான 'கைதி'யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யுடன் கூட்டணி அமைத்து 'மாஸ்டர்' இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று மாஸ்டர் குழு உறுதியாக இருந்து வருகிறதாம். இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது.

கமலின் விக்ரம் படம் :

இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது. இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோராபோடப்பட்டு கொண்டு இருந்தது.

இப்படி ஒரு நிலையில் கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர்வெளியாகியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தாமதமானது, அதே போல கமலும் தன் அரசியல் மற்றும் பிக் பாஸ் வேலைகளால் பிஸியானார்.

மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்திற்காக பிக் பாஸில் இருந்து விலகினார் கமல். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. மேலும், இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அடுத்ததாக விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சோறு போட்ட நண்பன் :

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஓட்டல் முதலாளியும் தனது நெருங்கிய நண்பருமான ஸ்ரீனி என்பவரின் புகைப்படத்தை பதிவு செய்து, கடந்த 2010களில் தான் வறுமையில் இருக்கும் போது மாசக் கடைசியில இவன் தான் எனக்கு சோறு போடுவான் என்றும் எனது நண்பர் ஸ்ரீனிக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் ஆகி வருகின்றன.

Tamil Behind Talkies AMP · Quick view
View full