என்னை மீட்டு கொண்டு வந்த ராக்ஸ்டார் - விஜய் சேதுபதிக்கு நன்றி மறக்காமல் லோகேஷ் செய்த விஷயம்.

By Rajkumar · 7/3/2021

ஆதித்யா சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ். இவர் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான், ஜாம்பி என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு ரொம்ப நாளாகவே பிளட் பிரஷர் இருந்து இருக்கு. ஆனால், அது எனக்கு தெரியவில்லை.

நான் குண்டாக இருப்பதனால் ஒபிசிட்டி பிரச்சனையும் இந்த ஸ்ட்ரோக்கு காரணம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எனக்கு முதல் ஆபரேஷன் முடிந்து பத்து நாட்கள் வரைக்கும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் பிளட் பிரஷர் அதிகமாக இருந்தால் தான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நினைத்தேன். அப்புறம் தான் எனக்கு நடந்ததை சொன்னார்கள். மூளையில் ரத்தம் கட்டி இருந்ததற்காக எனக்கு ஆபரேஷன் பண்ணினார்கள்.

அப்போது மூலையில் இருந்த ஸ்கல்லை எடுத்திட்டு தான் ஆபரேஷன் பண்ணாங்க. இப்போ அந்த ஸ்கல்லை வைப்பதற்கு திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டுமாம்.அதற்கு பிறகு நான் நல்ல ஆகிவிடுவேன் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னுடைய முகத்தோற்றம் கொஞ்சம் மாறி தான் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=uppo6RHIADE

லோகேஷ், அறுவை சிகிச்சைக்கு இரண்டு முறை விஜய் சேதுபதி உதவி இருந்தார். அதே போல லோகேஷ் மருத்துவமனையில் இருந்த போது அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் விஜய் சேதுபதி. இப்படி ஒரு நிலையில் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக லோகேஷ், விஜய் சேதுபதியை நேரில் அழைத்து கேக் வெட்டியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டராகம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ், என்னை மீட்டு கொண்டு வந்த ராக்ஸ்டார் விஜய் சேதுபதிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full