உங்களின் நுண்ணறிவும் கதை சொல்லும் பேரார்வமும் பிடிக்கும் - ஆமீர் கான் பற்றி லோகேஷ் சொன்ன தகவல்

By ·

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதாக நடிப்பதாக வரும் செய்தி குறித்து லோகேஷ் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி படம்:

இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் பதிவு:

மேலும், இந்த படத்தில் நடிகர் ஆமீர் கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ், ஆமீர்கான் உடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமீர்கான் சார்.

ஆமிர்கான் குறித்து சொன்னது:

நமக்கு இடையே நிகழ்ந்த அந்த உரையாடலை எண்ணி மகிழ்கிறேன். உங்களுடைய நுண்ணறிவும், கதை சொல்லலில் உங்களுக்கு இருக்கும் பேர் ஆர்வம் எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறது. வரும் ஆண்டுகளில் திரையில் மேலும் மேஜிக்குகளை உருவாக்குவோம். இந்த ஸ்பெஷலான நாளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் சார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை