ஒரு சில விஷயத்தை நம் வாழ்க்கையில் மாற்ற முடியாது - கவின் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த லாஸ்லியா.
நடிகர் கவின் திருமணம் குறித்து அவரின் முன்னாள் காதலி லாஸ்லியா மனம் விட்டு பேசியுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியவர் கவின். அதற்கு பிறகு இவர் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் விஜய் தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.
அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின் நட்புன்னா என்ன தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இதே சீசனில் இவருக்கு லாஸ்லியாவிற்கும் காதல் மலர்ந்தது. அந்த சீசன் ஹிட் அடித்ததற்கு இவர்களின் காதலும் ஒரு காரணம் தான்.
ஆனால், இவர்கள் காதலை இருவருமே வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் எல்லாம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரை இவர்கள் தங்கள் காதலை ஒப்புக் கொள்ளவும் இல்லை. மேலும், இருவருமே தங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை அதனால் பேசிக் கொள்வதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
இதனால் லாஸ்லியாவை கவின் ஏமாற்றி விட்டதாக லாஸ்லியாவின் ஆர்மியும் கவினை லாஸ்லியாவின் ஏமாற்றி விட்டதாக கவினின் ஆரமியும் சண்டை இட்டு கொண்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியனது. கவின் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயர் மோனிகா. இவர் தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரைத்தான் கவின் ரகசியமாக காதலித்து வந்தார்.
இவர்களுடைய காதல் ரகசியமாக இருந்தது. தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கவினின் திருமண செய்திகள் வெளியான பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்டாவாசிகள் பலரும் 'நீங்க ரொம்ப துரதிர்ஷ்டசாலி, 20ஆம் தேதி கவினுக்கு கல்யாணம் வந்துடுங்க' என்று வெறுப்பேற்றி வருகின்றனர்.
https://youtu.be/nK03AJYpuGQ?si=9mKX0MKaKWw7iu0s
மனம் விட்டு பேசிய லாஸ்லியா
கவின் திருமணம் செய்துகொண்டதை அறிந்து பின் நாம் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் அவருடைய கெரியரிலும் நல்லா பண்ணிட்டு இருக்காங்க. அவருடன் தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது. அதனால் அவருக்காக நான் மிகவும் சந்தோஷப்படுறேன். என தன் முன்னாள் காதலன் கவின் குறித்து லாஸ்லியா பேசி உள்ளார். அதேபோல் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, நிச்சயம் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன் என்றும் உறுதியாக கூறினார். சில இழப்புகளை ஏற்று கொள்வது கடினம் என்னுடைய அப்பா இறந்து 3 வருடங்கள் ஆகிறது. அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஏதும் தெரியாது. நான் பிக் பாஸ் முடித்து வெளி வந்த உடனே வருத்தப்பட்டார். அதன் பின் மிடியா பற்றி தெரிந்து கொண்டு எனக்கு சப்போர்ட் செய்தார் என்றும் கூறியிருந்தார்.