'வாழ்க்கை ஒரு வட்டம்டா' - விஜய் படம் குறித்து 8 ஆண்டுக்கு முன் 'லவ் டுடே' பட இயக்குனர் போட்ட பதிவை இன்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள்.

By Ajju · 5/11/2022

விஜய் படம் குறித்து இயக்குனர் பிரதீப் போட்டு இருக்கும் பழைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே.

இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார்.

படத்தின் கதை :

ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

வரவேற்பை பெரும் லவ் டுடே படம் :

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது.

8 ஆண்டுக்கு முன் போட்ட பதிவு :

இந்த படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரதீப் ரங்கநாதன் , விஜய் படத்தை கேலி செய்து போட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது 2014 ஆம் ஆண்டு ட்விட்டரில் பிரதீப் அவர்கள் விஜய் படத்தை கலாய்த்து சில பதிவுகள் போட்டு இருந்தார்.

ரசிகர்கள் பதிலடி :

ரஜினி லிங்கா படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால், விஜய்யின் கத்தி படத்திற்கு முதல் நாள் எளிதாக டிக்கெட் கிடைத்தது என்றும், ஜில்லா படத்தின் டப்பிங் சுறா படத்தை விட மோசமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். ஆனால், தற்போது விஜய்யின் பட தலைப்பையே வைத்து படத்தின் டைட்டில் கார்டில் விஜய்க்கு நன்றி சொல்லி இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிகாட்டி வாழ்க்கை ஒரு வட்டம்டா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full