தன்னை ஜானி சின்ஸ்சுடன் ஒப்பிட்டு வந்த மீம் குறித்து பேசிய பிரதீப் - பெண் Vjவின் Reaction. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 25/11/2022

பெண் தொகுப்பாளினியிடம் ஜானி சின்ஸ் குறித்து பிரதீப் பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ரஜினி கூட பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும், இந்த படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரதீப் உடைய பழைய டீவ்ட்டுகள்கடந்த சில நாட்களுக்கு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

https://twitter.com/balookundulover/status/1595970735436357633

இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். பின் லவ் டுடே படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறித்தும் இவர் மோசமாக விமர்சித்து பதிவு போட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து பிரதீப்பை பலரும் திட்டி தீர்த்து வந்தனர்.

https://twitter.com/GiriJrtarak3/status/1596018364899807232

இதுகுறித்து விளக்கமளித்த பிரதீப் 'அதிகம் பரவி வரும் பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.சில பதிவுகள் உண்மையானவை. ஆனால், Cuss Words கொண்டிருக்கும் பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்து விட்டேன். வயதுக்கேற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக் கொள்கிறோம். நான் அதை சரி செய்து முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று கூறி இருந்தார்.தமிழைப் போல தெலுங்கிலும் லவ் டுடே திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

https://twitter.com/Krishinfo05/status/1595979208991600640

இந்த நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றின் பேட்டியில் பங்கேற்ற பிரதீப் தன்னையும் ஜானி சின்ஸ்ஸையும் ஒப்பிட்டு வெளியான மீம் குறித்து தொகுப்பாளினியிடம் பேசி இருந்தார். ஆனால், அந்தத் தொகுப்பாளனி அவர் எந்த மீம் குறித்து பேசுகிறார் என்று புரியாமல் முழித்தார். அதற்கு பிரதீப் சிரித்தபடி இது சர்வதேச அளவிலான மீம் என்று கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவ ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவது என்று பிரதீப்பை திட்டி தீர்த்து வருகிறார்கள். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரதீப்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full