நன்றிக்கடனுக்காக சில்வர் பெயிண்ட் பூசி மேடை ஏறிய ரோபோ ஷங்கர் - லப்பர் பந்து கலை இயக்குனர் சொன்ன ப்ளாஷ்பேக்
கடந்த சில தினங்களாக நடிகர் ரோபோ சங்கர் பற்றிய செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருந்தவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கருக்கு திடீரென்று நீர் சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்திருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருந்தார்கள். பின் நேற்று முன் தினம் திடீரென்று இவரை icuவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்து வந்திருந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்திருக்கிறார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
ரோபோ சங்கர் மறைவு:
இந்த நிலையில் இது தொடர்பாக லப்பர் பந்து கலை இயக்குனர் அளித்த பேட்டியில், 1995-ல் ஆரம்பித்து மதுரையில் மேடை நடனக்கலைஞர்கள் ராஜேஷ்-மோகன் நடத்திய “மாஸ்டர் அபிநயா” என்ற மேடை நடனக்குழுவில் நானும் அங்கம் வகித்தேன். அந்த காலத்தில் மிகவும் பிரபலமான நடனக்குழு. 1998-ல் சங்கர் தலைமையில் ஒரு காமெடி நிகழ்ச்சி நடத்துகிற குழு ஒன்று எங்களிடம் அனுகினார்கள். அப்பொழுது சங்கர், செளந்தர், அரவிந்த் மூவரும் வந்து எங்கள் மாஸ்டர்கள் ராஜேஷ்-மோகன்-இடம் பேசினார்கள். உங்கள் குழு ரொம்ப பிரபலமான குழு நாங்களும் உங்களுடன் இணைந்து மேடையில் காமெடி நிகழ்ச்சி நடத்தினால் தொடர்ந்து ஆடுகிற உங்களுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். நீங்கள் 2,3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுங்கள்.
கலை இயக்குனர் பேட்டி:
நன்றாக செய்தால் நீங்கள் எங்களை தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் எங்களை நிராகரித்து விடுங்கள் என்று சொல்லிதான் எங்கள் குழுவில் இணைந்தார்கள். அந்த 2,3 நிகழ்ச்சி இவர்களின் பெர்ஃபார்மன்ஸ் மிகச்சிறப்பாக அமைந்தது. மக்கள் ரசித்தார்கள். பிறகு தொடர்ந்து எங்களுடன் இணைந்து மேடையில் காமெடி நிகழ்ச்சி செய்தார்கள். தொடர்ந்து ஆடுகிற எங்களுக்கும் 20 நிமிட ஓய்வு கிடைத்தது. ஒரு நாள் எங்கள் குழுவில் (ரோபோ) உடம்பில் சில்வர் பூசி ஆடுகிறவர் சில நாட்களில் வருவதில்லை. அதனால் எங்கள் மாஸ்டர்கள் “ராஜேஷ்-மோகன்” இருவரும் ஜிம் பாடியாக இருந்த சங்கரை (ரோபோ) உடம்பில் சில்வர் பூசி ஆடவைக்கலாம் என்று முடிவெடுத்து சங்கரிடம் இந்த விஷயத்தை சொன்னார்கள்.
ரோபோ சங்கர் பற்றி சொன்னது:
அப்பொழுது கொஞ்சம் கூட யோசிக்காமல் எங்களுக்கு வாழ்க்கை குடுத்தது நீங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று ஒத்துக்கொண்டார். பிறகு எங்கள் மாஸ்டர்கள் அதற்கென “கமல் சார் நடித்த விக்ரம் படத்தில்” வரும் “ஏஞ்சோடி மஞ்சக்குருவி” பாடலில் இடையில் வரும் இசையை தேர்ந்தெடுத்து அந்த இசையை சங்கரிடம் கொடுத்து உடம்பில் சில்வர் பூசி முதல்முறையாக ஒரு மேடையில் ஆட வைத்தோம். சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு எங்கள் குழுவில் காமெடி நிகழ்ச்சி முடித்து உடம்பில் சில்வர் பூசி ஆட ஆரம்பித்தார். அன்றிலிருந்து வெறும் சங்கர் ரோபோ சங்கராக மாறினார்.
ரோபோ சங்கர் குடும்பம்:
சென்னையிலிருந்து மதுரைக்கு எங்கள் குழுவிற்கு மேடையில் நடனமாட பிரியங்கா வந்தார். எங்கள் குழுவில் உள்ள சங்கரின் சேட்டைகளையும் அவரின் திறமையும் கண்டு ரசிக்க ஆரம்பித்து இருவரும் காதலித்தார்கள். திருமணத்திற்கு எதிர்ப்பு வந்தபோதுகூட உடன் எங்கள் குழுதான் சங்கருக்கும் பிரியங்காவிற்கும் திருமணம் செய்து வைத்தோம். திருமணம் முடிந்தபிறகு அவர் சென்னை வந்து தொலைக்காட்சிகளில் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தி திரைத்துறையிலும் முன்னேறி முன்னணி நடிகராகவும் மாறினார். வரக்கூடாத நோய் வந்து ஒரு நல்ல மனிதனை நாம் இப்பொழுது இழந்து நிற்கிறோம் என்று கூறி இருக்கிறார்.