தனது கணவரை மீண்டும் திருமணம் செய்த லப்பர் பந்து பட நடிகை - இதான் காரணமாம்

By subhashini · 27/1/2025

லப்பர் பந்து பட நடிகை ஸ்வாசிகாவிற்கு இரண்டாவது முறை திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் எஸ்.லட்சுமணன் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். ஹரிஷ் கல்யாண் – தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், தன்னை உயர்த்தி காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் இது. சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளி இருந்தது. மேலும், இந்த படத்தில் கெத்து தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்வாசிகா.

ஸ்வாசிகா குறித்த தகவல்:

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. இதற்கு முன்பே இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வைகை என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப்பின் இவர் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் நிறைய சீரியல்கள், படங்களில் நடித்திருந்தார்.

ஸ்வாசிகா நடிக்கும் படங்கள்:

இருந்தாலும், லப்பர் பந்து படத்தின் மூலம் தான் ஸ்வாசிகாவிற்கு நல்ல பெயர் கிடைத்து இருந்தது.
அது மட்டும் இல்லாமல் இதை தொடர்ந்து தமிழில் இவருக்கு பல வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் சூரி நடிப்பில் உருவாகி வரும் மாமன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பின் ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திலும் ஸ்வாசிகா நடிக்கிறார். இதுமட்டும் இல்லாமல் இவர் இன்னும் வேறு சில மொழிப்படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார்.

ஸ்வாசிகா திருமணம்:

இதற்கிடையில் இவர் தன்னுடன் நடித்த நடிகர் பிரேமை நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். இருவருமே ஒரு வழியாக இவர்கள் இரு வீட்டாரிடமும் திருமணதிற்கு சம்மதம் வாங்கி இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணத்திற்க்கு பிறகும் நடிகை ஸ்வாசிகா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அத்ர்போல் பிரேம் ஜேக்கப் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற தொடரில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

ஸ்வாசிகா இரண்டாவது முறை திருமணம்:

இந்நிலையில் ஸ்வாசிகாவுக்கு இரண்டாவது முறை திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை ஸ்வாசிகா- பிரேம் ஜேக்கப் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது. இதை தான் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி தான் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வது என்பது ரொம்ப நாள் ஆசையாம். அதனால் இந்த ஆண்டு தங்களுடைய முதல் திருமண நாளை தமிழ் முறைப்படி இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full