ஆர் எஸ் மனோகருக்கு கடைசி படமாக அமைந்த நேற்று வெளியான லக்கி மேன் திரைப்படம் - இயக்குனர் உருக்கம்.

By Rajkumar · 2/9/2023

மறைந்த நடிகர் ஆர் எஸ் சிவாஜி மறைவு குறித்து லக்கி மேன் பட இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்று காலை திடீரென்று உடல்நல குறைவு காரணமாக நடிகர் ஆர் எஸ் சிவாஜி காலமாகி இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதுமே நடிகர் ஆர் எஸ் சிவாஜியின் இறப்பு குறித்து செய்தி தான் வைரலாகி வருகிறது. இவருடைய இறப்பிற்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலருமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லக்கி மேன் படத்தின் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் அவர்கள் மறைந்த நடிகர் ஆர் எஸ் சிவாஜி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர், எனக்கு ஆர் எஸ் சிவாஜி சாரை ரொம்ப வருஷமாக தெரியும். நான் இயக்குனர் ஆவதற்கு முன்பு நிறைய ரில்ஸ் வீடியோக்களை பண்ணி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு தான் சிவாஜி சார், நீ இயக்குனராக இருக்க வேண்டிய தகுதிகள் எல்லாம் நிறையவே இருக்கு என்று என்னை ஊக்கப்படுத்தினார். லக்கி மேன் படம் கமிட்டான போது ஒரு சின்ன கதாபாத்திரத்திற்காக அவரிடம் நடிக்க கேட்டேன். ஆனால், அவர் ஒரு சின்ன ரோலோ? பெரிய ரோலோ? எதுவாக இருந்தால் என்ன? உன் படம் என்றால் நான் செய்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் அளித்த பேட்டி:

கமல் சார் கூடவே அவர் அதிகம் பயணித்ததால் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தார். அவரிடம் நிறையவே கத்துக்க முடியும். அவரை பார்த்தால் கொஞ்சம் சிடுசிடுன்னு இருக்குற ஆள் மாதிரி தான் தெரியும். ஆனால், பழகி பார்த்தவர்களுக்கு தான் அவர்கள் தங்கமான மனிதர் என்று புரியும். அருமையான மனிதர். அவர் காட்சிகள் படமாக்கின பிறகு அவருடைய கதாபாத்திரத்தை குறைவாக எழுதிட்டனோ என்று எனக்கு நினைக்கத் தோன்றியது. யோகி பாபு, சிவாஜி சார் ரொம்ப ஜெல் ஆகிட்டாங்க.

ஆர் எஸ் சிவாஜி குறித்து சொன்னது:

அவர் மீது தனி அன்போடு யோகி பாபு சார் இருந்தார். அதேபோல் சிவாஜி சார் படப்பிடிப்புக்கு வரும்போதும் கூட சில நாட்கள் உடல் நிலம் சரி இல்லாமல் தான் இருந்தார். கொஞ்சம் டல்லாக தான் வந்தார். அப்போது அவர் நீ கவலைப்படாதே டப்பிங் வந்து விடுவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எல்லோருடைய டப்பிங் முடிச்சு விட்டு சொல்லு கடைசியில் வந்து பேசுகிறேன் என்றார். அதேபோலவே கடைசியில் அவர் டப்பிங் செய்து கொடுத்தார்.

ஆர் எஸ் சிவாஜி மறைவு:

மேலும், நீ இயக்குனர் டா என்று என்னை தட்டிக் கொடுத்து பாராட்டினார். இன்று காலையில் அவர் இறந்த செய்தி கேட்டதுமே எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. நேத்து கல்லு மாதிரி இருந்த மனுஷன் இன்று இல்லை என்று சொன்னதுமே கண் கலங்கிவிட்டது. அவருடைய கடைசி சிரிப்பு என் படத்தில் தான். அந்த சிரிப்பு எப்பவும் என்னுடைய இதயத்தில் நிறைந்து இருக்கும் என்று அழுகுரலிலேயே பேசி இருந்தார். தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் ஆர் எஸ் சிவாஜி.

ஆர் எஸ் சிவாஜி நடித்த கடைசி படம்:

இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இணை இயக்குனர், ஒலி வடிவமைப்பாளர், லைன் ப்ரொடியூசர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் அதிகம் தமிழ் மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்திருந்த படம் லக்கி மேன். இந்த படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full