Rolls Royce Muthal முதல் Jaguar வரை - தனுஷ் வைத்திருக்கும் சொகுசு கார்கள் எத்தனை தெரியுமா ? ஒவ்வொன்றின் விலை.

By Ajju · 30/7/2022

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கும் தனுஷூக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களின் வெற்றியால் 4 தேசிய விருதுகளை வென்ற அவர், தற்போது வாத்தி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். டைரக்டர் செல்வராகனின் நானே வருவேன் படத்திலும் நடித்து கொண்டு இருக்கிறார்.

ஹாலிவுட்டிலும் கலக்கும் தனுஷ் :-

அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அந்தோனி ருஸ்ஸோ ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் தி கிரே மேன் படம் தற்போது நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானதிலிருந்து தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட்டின் முக்கியமான படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்ட அந்த புகைப்படங்களும் வைரலானது. மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரிவியூ ஷோவில் தனுஷ் வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டார்

கார்கள் மீது அளாதி பிரியம் :-

பொதுவாக பிரபலங்களுக்கு சொகுசு கார் மீது அதீத பிரியம் இருக்கும். அதேபோல் தனுஷூக்கு வகை வகையான கார்கள் மீது அளாதி பிரியம். அவருக்கு சினிமா மீது எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தளவுக்கு கார்கள் மீதும் ஆர்வம் அதிகம்.
திரைப்படங்களைக் கடந்து புதிய கார்களை வாங்குவதிலும் தனுஷூக்கு ஆசை உண்டு. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி வரை என இதுவரை பல விலை உயர்ந்த கார்களை வாங்கியுள்ளார். அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் பட்டியலை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.

  1. பென்ட்லி கான்டினென்டல்
    ஃப்ளையிங் ஸ்பர்:-
    (Bentley Continental Flying Spur)

பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்
இந்தியாவில் சில கோடிகள் செலவில் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் வைத்திருக்கும் சில பிரபலங்களில் தனுஷும் ஒருவர். நடிகரின் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் சுமார் 3.74 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான பென்ட்லியின் பிரபலமான மற்றும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும்.

  1. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் :-
    (Rolls Royce Ghost)

கருப்பு நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் தனுஷிடம் உள்ளது. காரின் விலை சுமார் ரூ.7 கோடி. தனுஷிடம் இருக்கும் மிக விலையுயர்ந்த கார் இதுவாகும்.

  1. ஆடி ஏ8 :-
    (Audi A8)

தனுஷின் கலெக்ஷனில் அடுத்த கார் ஆடி ஏ8, 5 இருக்கைகள் கொண்ட காராகும். இதில் 23-ஸ்பீக்கர் பேங் மற்றும் ஓலுஃப்சென் மூலம் 3D சரவுண்ட்ஸ் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோலும் உள்ளது. மேலும், பின் சீட்டில் அமர்பவர்களுக்கு வசதியாக திரைகள், ஆல்-வீல்-ஸ்டியரிங், ஏர் சஸ்பென்ஷன் மற்றும் பார்க் அசிஸ்ட் பிளஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆடி ஏ8, ஸ்வான்கி காரின் மதிப்பிடப்பட்ட விலை சுமார் 1.57 கோடி ரூபாய் ஆகும்.

  1. ஃபோர்டு முஸ்டாங் ஜிடி :-
    (Ford Mustang GT)

ஃபோர்டு முஸ்டாங் ஜிடி
தனுஷிடம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார் உள்ளது. மேலும், ஐந்தாவதாக செடான் ஜாகுவார் XE என்ற சொகுசு காரை வைத்து இருக்கிறார். 5 இருக்கைகள் கொண்ட ஜாகுவார் XE சொகுசு கார் மிகவும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும். ஜாகுவார் எக்ஸ்இ காரின் மதிப்பிடப்பட்ட விலை சுமார் ரூ.45 லட்சமாகும்.

  1. செடான் ஜாகுவார் XE :-
    (Sedan Jaguar XE)

5 இருக்கைகள் கொண்ட ஜாகுவார் XE கார் ஒன்றையும் தனுஷ் வைத்திருக்கிறார். இது மிகவும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும். ஜாகுவார் எக்ஸ்இ காரின் விலை சுமார் ரூ.45 லட்சம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full