பான் இந்தியா கதை மாதிரி இருந்தது - விஜய் மகன் இயக்கும் முதல் படத்தின் கதை குறித்து லைகா நிறுவனர்
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புது படத்தின் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருக்கிறது. கடைசியாக இவர் நடித்த கோட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
மேலும், தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். இவர் அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார். பின் இவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து முடித்தார். அதன் பின் இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படம்:
ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்தது. அதே போல லைகா நிறுவனத்தில் முதல் படமே விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஜேசன் சஞ்சய்யின் முதல் படமே பிரம்மாண்ட பேனரில் வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ணி கோலிவுட் வட்டாராமே மிகந்த வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது.
படத்தின் நாயகன்:
இந்நிலையில் ஜோசன் சஞ்சய் இயக்கம் படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து படம் குறித்த தாவல் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
ஜிகேஎம் தமிழ் குமரன் சொன்னது:
லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் வெளியிட்டிருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, “நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். 'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும்.
படம் குறித்த தகவல்:
தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம். மேலும், படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறி இருக்கிறார்.