அமலா ஷாஜியை இயக்குனரும் நடிகருமான பிரியன் விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது 2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழ்பவர் அமலா ஷாஜி. இவர் பிரபல நடிகைகளை விட சோசியல் மீடியாவில் அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார் தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளை விட சமூக வலைதளத்தில் அமலா ஷாஜியை தான் ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள்.

இன்ஸ்டாவில் அமலா ஷாஜியை ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள். அதற்கு காரணம் இவருடைய கியூட்னஸ் ஓவர்லோடு தான் என்று 2k கன்னிஸ்கள் fire விட்டு வருகின்றனர். இவர் கேரளாவை சேர்ந்தவர். டிக் டாக்கின் மூலம் அமலா ஷாஜி மக்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால், டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டார். தற்போது இவரை 4 மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பாலோ செய்கிறார்கள்.

Advertisement

அமலா ஷாஜி வீடியோ:

காலையில் முழிப்பதே அமலா ஷாஜியின் முகத்தில் தான் என்று சொல்லலாம். பின் இன்ஸ்டாகிராம், மோஜ், யூடியூபில் இவருடைய வீடியோக்கள் எல்லாம் கொடிகட்டி பறக்கிறது. அதிலும் இவருடைய ஆட்டம், பாட்டம் என தரமான கன்டென்ட்களை உருவாக்கி தருகிறார். இப்போது வரை அது தான் அவருடைய ஸ்டைல். கற்பூரம் போல் ட்ரெண்டிங் ரீல்ஸ்களை பிடித்து வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

அமலா ஷாஜி குறித்த தகவல்:

மேலும், இவர் தன்னுடைய சகோதரி சேர்ந்து செய்யும் ரில்ஸ், சோலோ டான்ஸ், ரீகிரியேஷன், அம்மா அப்பாவுடன் ஃபேமிலி ரில்ஸ், பண்டிகைகளில் புதிய ஆடைகள், கடை விளம்பரம் என புது புது கான்சப்ட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோ பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இந்த நிலையில் அமலா ஷாஜியை விமர்சித்து பிரியன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பஞ்சாயத்து ஆகி இருக்கிறது.

Advertisement

பிரியன் சொன்ன கருத்து:

தமிழ் சினிமாவில் மாக்கலயா, மஸ்கரா போட்டு மயக்குறியே போன்ற பாடல் என பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய பாடல் ஆசிரியர் பிரியன். தற்போது இவர் அரணம் என்ற படத்தை எழுதி இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா தான் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய பிரியன், இரண்டு நிமிஷம் பாடலுக்கு நடனமாட சென்னையில் ஒரு பொண்ணு 50,000 கேட்கிறார். வெறும் 30 செகண்ட் நடனமடை கேரளா பொண்ணு ரெண்டு லட்சம், பிளைட் டிக்கெட் எல்லாம் கேட்கிறார்.

Advertisement

ரசிகர்கள் ஆதரவு:

நானே பிளைட்டில் போகலையே அம்மா என்று பேசி இருக்கிறார். உடனே அந்த பெண்ணுடைய பெயர் என்ன என்று திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி கேட்கிறார். அதற்கு அவர், யாரு அமலா ஷாஜி தான் என்று சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விமர்சகர் ஒருவர், அமலா அவர்களுடைய கடின உழைப்பால் தான் தற்போது பல மில்லியன் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருக்கிறார். நீங்கள் அவரைத் தேடிப் போனதே உங்களுடைய படத்தின் பப்ளிசிட்டிக்காக தான். உங்களால் அவர்கள் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடிந்தால் அவர்களை புக் செய்து நடிக்க வையுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இப்படி வெளிப்படையாக ஒருவருடைய பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கோபமாக பேசுகிறார். இதற்கு பலருமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், சில நெட்டிசன்கள் வழக்கம்போல் அமலா ஷாஜியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement