'மீம் மெட்டீரியல் ஆவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல' - மாமன்னன் சக்சஸ் மீட் வைரல் ஆங்கர் - அட, இவங்க யார் தெரியுதா ?

By Arun · 14/7/2023

மாமன்னன் சக்சஸ் மீட்டிங் ஆங்கர் ஏஞ்சலினாவை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=DggmbkDBWZQ&t=359s

மேலும், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

மாமன்னன் படம்:

இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார். மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

வெற்றி விழா:

அதோடு மாமன்னன் படம் வெற்றி அடைந்தது அடுத்து சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழாவை பட குழுவினர் நடத்தி இருக்கிறார்கள். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், இயக்குனர் மாரி செல்வராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, உதயநிதி, மாரி செல்வராஜ் என பலரும் படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தது ஏஞ்சலின்.

ஏஞ்சலின் அளித்த பேட்டி:

தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது தொகுப்பாளர் ஏஞ்சலின் பற்றி தான். இவர் சன் டிவியில் நியூஸ் ஆங்கராக மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.தற்போது இவர் தொகுப்பாளராகவும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, மாமன்னன் படத்திற்கு முன்னாடி நான் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். ஆனால், தற்போது நானே மீம் மெட்டீரியல் ஆகுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்போது என்னை பலரும் அடையாளம் கண்டு குறிப்பிட்டு பேசுவது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=-b6SDbi2JPA

மீடியா பயணம் குறித்து சொன்னது:

இனிவரும் காலங்களில் நன்றாக வேலை செய்யணும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி படிக்கும் போதே ஒரு டிவி சேனலில் மூணு மாசம் இன்டர்ன் பண்ணினேன். அதற்குப்பின் தான் சன் டிவியில் நியூஸ் ஆங்கராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு பிபிசியில் ஆங்கர் ஆகணும் என்பதுதான் ஆசை. இப்போது சன் டிவியில் நச்சுனு நாலு சினிமா செய்திகள் என்ற நிகழ்ச்சியையும், வணக்கம் தமிழா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குகிறேன். எனக்கு என்னுடைய வீட்டில் அதிக சப்போர்ட் செய்கிறார்கள். இப்போதைக்கு நான் ஆங்கரில் தான் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full