சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

சமீபத்தில் வெளியான வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை விமர்சனம் என்ற பெயரில் கலாய்த்து தள்ளி இருந்தனர். அதிலும் வலிமை படத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அஜித்தை உருவக் கேலி கூட செய்தார். இதனால் இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் ஒரு பனிப் போரே ஏற்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான ‘மாறன்’ படத்தையும் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

மீண்டும் OTTயில் தனுஷ் படம் :

ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் ‘மாறன்’. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 11 ம் தேதி நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஜகமே தந்திரம், அத்தரங்கி ரே/ கலாட்டா கல்யாணம் படத்தை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி இருக்கும் இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றுள்ளது.

படத்தில் ஒரு நேர்மையான பத்திரியாக்கியாளராக வரும் தனுஷ் உண்மையை மட்டும் தான் எழுதுகிறார். ஒரு கட்டத்தில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்யும் வில்லனின் செயலை கண்டுபித்து பின் அதை செய்தியாக வெளியிட்டு விடுகிறார். இதனால் தனுஷின் தங்கை கொல்லப்படுகிறார். அவரது தங்கையை கொன்றது யார் ? தனுஷ் அனைத்து பிரச்சனைகளில் இருந்து வெளிவருகிறாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

Advertisement

ஏமாற்றம் கொடுத்த மாறன் :

இந்த படத்தை பார்க்கும் போது கே வி ஆனந்தத்தின் ‘கோ’ படத்தையும் ரஜினியின் தர்பார் படத்தையும் கலந்து பார்த்தது போலத்தான் இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நாயகியாக வரும் மாளவிகா மோகனன் மீண்டும் தனக்கு நடிப்பு வாராது என்பதை நிரூபித்து இருக்கிறார். மேலும், தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. இந்த படத்தில் நடித்த பாண்டா பிரசாந்தே படத்திற்கு சுமாரான விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார் என்றால் படம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

Advertisement

‘OTTல ஓட்டி, ஓட்டி’ :

என்னதான் பலர் விமர்சனம் செய்தாலும் ப்ளூ சட்டை விமர்சனத்திற்கு தான் அனைவரும் காத்து கொண்டு இருப்பார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ள மாறன் படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். மேலும், இறுதியில் ‘இப்படி படத்துக்கெல்லாம் நம்ம பெற வச்சி நம்ம பேர வேற கெடுத்துடுறாங்கள்’ என்று பங்கம் செய்துள்ளார் மாறன். அதே போல ட்விட்டரில் ரசிகர் ஒருவர், அநேகமா மாறன் படத்தை முழுசா பாத்த ஒரே ஆளு படத்தோட எடிட்டர் தான்னு நினைக்கறேன் என்று போட்ட கமெண்டை பகிர்ந்து ‘OTTல ஓட்டி, ஓட்டி’ என்று கலாய்த்துள்ளார் மாறன்.

Advertisement