தனுஷின் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட விமர்சனம் - மாரி செல்வராஜ் இப்படி சொல்லிட்டாரே?
தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் விமர்சனம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.
சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
தனுஷ் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் உடைய நடிப்பையும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டியிருந்தார்கள். இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்:
இது தனுஷ் இயக்கம் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், பிப்ரவரி 21ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தில் பிரியங்கா மோகன் 'கோல்டன் ஸ்பேரோ' என்ற பாடலுக்கு கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்து நடனமாடி இருக்கிறார். இவரை தொடர்ந்து தனுஷும் காதல் பெயில் என்ற பாடலுக்கு நடித்திருக்கிறார்.
இந்த படம் டீனேஜ் பருவ மாணவர்களில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி தாணு தான் தயாரித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் அளித்து இருக்கும் விமர்சனம் தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாரி செல்வராஜ் பேட்டி:
அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ், நீண்ட நாட்களுக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஒரு வழக்கமான காதல் கலையை பார்த்து ரசித்தேன். இருந்தாலும் தனுஷ் உருவாக்கியுள்ள ஒவ்வொரு விஷயங்களையும் கண்டு உற்சாகமடைந்தேன். இந்த படம் எல்லோருக்கும் உற்சாகத்தை கொடுக்கும். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சி என்பது காதலின் அப்பாவிதனத்தால் நிகழ்வது தான்
என்று கூறியிருக்கிறார். இப்படி மாரி செல்வராஜ் கூறியதற்கு, இந்த படத்தில் புதுசாக தனுஷ் எதுவும் கொடுக்கவில்லையா? எந்த மெசேஜும் இல்லையா? மாரி செல்வராஜ் இப்படி சொல்லிவிட்டாரே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.