என்னடா இது டபுள் ஆக்சனா? மாதம்பட்டி ரங்கராஜின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சி - நீங்களே பாருங்க

By subhashini · 13/8/2025

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியுடன் சேர்ந்து நிகழ்ச்சிக்கு சென்று இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் பிரபலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.

இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

அதற்கு பின் இவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய சமையல் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

ரங்கராஜ் பற்றி சர்ச்சை:

இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா. இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிஸ்டா, சில போஸ்ட்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார்.

ரங்கராஜ் இரண்டாம் திருமணம்:

இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மாதம்பட்டி ரங்கராஜ், ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். இது தொடர்பாக ஜோய் கிரிஸ்டலா போட்ட பதிவில், பேபி லோடிங் 2025. நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே ஜோய் கிரிஸ்டலா கர்ப்பம் ஆனதால் தான் இந்த அவசர திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக ரங்கராஜ்-ஸ்ருதி இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=_RdricoQMZA

முதல் மனைவியுடன் ரங்கராஜ்:

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதி உடன் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இருவருமே பக்கத்தில் தான் அமர்ந்து இருந்தார்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து கூட பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full