6 மாதம் கர்ப்பம், அவசர அவசரமாக ஜோய் கிரிசில்டாவை திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - முதல் மனைவி?

By subhashini · 27/7/2025

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.

இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

அதற்கு பின் இவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் சமையல் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரங்கராஜ் பற்றி சர்ச்சை:

கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ரங்கராஜ் இரண்டாம் திருமணம்:

சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா. இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்வதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிஸ்டா, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் சில போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார். குறிப்பாக காதலர் தினத்தன்று மாதம்படி ரங்கராஜ் என்னுடன் தான் இருந்தார். உலகம் உயிர் அவர் தான் என்று அவர் கொடுத்த கிஃப்ட்டை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஜாய்,தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜ் என்ற பெயரையும் இணைத்து இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by J Joy (@joycrizildaa)

ஜோய் கிரிசில்டா பதிவு:

இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக ரங்கராஜ்-ஸ்ருதி எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக ஜோய் கிரிஸ்டலா போட்ட பதிவில், பேபி லோடிங் 2025. நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே ஜோய் கிரிஸ்டலா கர்ப்பம் ஆனதால் தான் இந்த அவசர அவசர திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல் முதல் மனைவியை மாதம் பட்டி ரங்கராஜ் விவாகரத்து செய்தாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full