மீண்டும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் மாதம்பட்டி ரங்கராஜ், வெளியான படத்தின் டீசர்

By subhashini · 29/9/2024

மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படத்தின் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் தான் ரங்கராஜ். இவர் ‘மாதம்பட்டி பாகசாலா’ என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.

இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார். அதற்கு பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான்.

குக் வித் கோமாளி:

மேலும், இவருடைய தலைமையில் உணவு சமைக்கும் கலைஞர்கள் முக்கியமான நிகழ்ச்சிகளில் கேட்டரிங் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் சமையல் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருக்கிறார். ஐந்து சீசன்களாக வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் புது படம்:

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அதாவது, இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.

https://www.youtube.com/watch?v=kwOYFwRz8hU

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் யோகி பாபு அவர்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரங்கராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full