இந்தியா சார்பில் விளையாடி 5 தங்க பதக்கங்களை குவித்த மாதவனின் மகன் - மாதவனின் நெகிழ்ச்சி பதிவு.

By Rajkumar · 17/4/2023

நடிகர் மாதவனின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில் தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அந்தவகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்று இருக்கிறார் வேதாந்த். அதிலும் வெறும் 10 மில்லி நொடிகள் வித்யசத்தில் தங்கத்தை தட்டி சென்றார் வேதாந்த்.

இந்த வெற்றி குறித்து பேசிய அவர் '"நான் என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை. நான் அவரது மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயர் வாங்க விரும்புகிறேன். எனது குடும்பம் எனக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கி வருகிறது. எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்" எனஇந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வேதாந்த் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன் 'மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கடவுளின் ஆசிர்வாதத்தாலும் உங்கள் வாழ்த்துக்களினாலும் வேதாந்த் இந்தியாவுக்காக 50மீ, 100மீ, 200மீ,400 மீ மற்றும் 1500 மீ ஆகிய பிரிவுகளில் 5 தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேதாந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்தார் மாதவன். இதுகுறித்து மாதவன் அளித்த பேட்டியில் 'கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் எல்லாம் மூடப்பட்டு இருந்தது.

View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)

நானும் என்னுடைய மனைவியும் எங்களுடைய மகன் உடன் துபாயில் இருக்கிறோம். இங்கு சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடிகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்காக வேதாந்த் தயாராகி வருகிறார் என்று கூறி இருந்தார். இப்படி அடுத்தடுத்து பதக்கங்களை வென்று வரும் மாதவன் மகன், நிச்சயமாக 2026 ஆம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வார் என்று வாழ்த்துவோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full