Madras central VS Eruma saani - பீதியில் நடிகர்கள் ! என்ன காரணம் தெரியுமா ?

By Ajju · 20/11/2017
யூடியூபில் எப்போதும் ட்ரெண்டாக இருக்கும் சில சேனலகளில் மிக முக்கியமான இரண்டு சேனல் தான், 'மெட்ராஸ் சென்ட்ரல் மற்றும் 'எரும் சாணி'. இந்த இரண்டு க்ரூப் தான் சளிக்காமால் மக்களை என்டர்டெய்ன் செய்து கொண்டு இருக்கிறது. தற்போது விசேசம் என்னவென்றால், இந்த மெட்ராஸ் சென்ட்ரல் மற்றும் எருமசாணி க்ரூப் இரண்டும் சேர்ந்து ஒரு ஃபீச்ச்ர் ஃபிலிமில் நடிக்கவுள்ளனர். தற்போது வரை ஒரே கேமராவில் சின்ன சின்ன சீன்கள் செய்து வந்த இரண்டு க்ரூப்பின் ஸ்டார்களும் ஒரு முழு நீள படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் எரும சாணி வீடியோக்களின் இயக்குனர் ரமேஷ் வெங்கட் தான் இயக்குகிறார். படத்தில் மெட்ராஸ் சென்ட்ரல் 'கோ-சு' மற்றும் எரும சாணியின் விஜய், ஹரிஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், யூடியூப் பிரபலம் ஷாராவும் நடித்துள்ளார். படம் கலகலப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இவர்களின் ரசிகர்களும் படத்திற்க்காக ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full