நானும் பொம்பள புள்ளைய பெத்தவன் தான், தயவு செஞ்சி இத மட்டும் அறிவிங்க - கை கூப்பி வேண்டிய மதுரை முத்து.

By Rajkumar · 7/3/2024

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மதுரை முத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்- மைதிலி தம்பதியினர்.

https://twitter.com/sivaranjithkv04/status/1765576115379491074?s=48

இவர்களுக்கு 9 வயதில் ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் தன் மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். நான்கு நாட்கள் ஆகியும் ஆர்த்தி கிடைக்கவில்லை. பின் ஒரு கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலமாக ஆர்த்தி என்ற சிறுமி கிடைத்து இருக்கிறார்.

இதனை அடுத்து போலீசார் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டு தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. பின் போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இது சம்பந்தமாக போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கஞ்சா குடிக்கும் 19 வயது இளைஞனும், 58 வயது கொண்ட முதியவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)

பின் விசாரணையில், அந்த இளைஞர் சிறுமிக்கு மொட்டை மாடியில் பாலியல் தொல்லை கொடுத்த போது அதை பார்த்த முதியவரும் தன்னுடன் சேர்ந்து கொண்டதாகவும் சிறுமி ரொம்ப கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடித்த அடியில் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து சிறுமி கொலையில் ஈடுபட்ட இருவர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞ்சர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த மதுரை முத்து தமிழகத்திலும் வழக்கறிஞ்சர் இது போல அறிவித்தால் பெற்றவர்கள் உங்களுக்கு காலம் முழுக்க நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு துபாயில் கொடுப்பது போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கற்பழித்தவர்களையும் நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்து கொள்வது போல இல்லை என்றாலும் நம்முடைய நாட்டில் இந்த குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் குழந்தைகள் செல்போனில் மூழ்கி இருப்பதை பார்க்கும் போது அது எந்த வகையில் கொண்டு செல்ல போகிறது என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full