ஒரு ஆணியும் ***முடியாது. நீ வா தலைவா. விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர். எந்த ஊரில்னு நீங்களே பாருங்க.

By Rajkumar · 16/2/2020

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவருக்கென்று தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல கடந்த சில காலமாகவே விஜய் படங்கள் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதற்கு மாஸ்டர் படமும் விதிவிலக்கு கிடையாது. கடந்த சில காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டு இருக்கிறது இதனால் விஜய் படங்கள் வெளியாகும்போது சில அரசியல் குறுக்கீடும் வருகிறது.

மேலும், நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்களில் இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் பேசிய சில கருத்துக்கள் அரசியல்வாதிகளை தாக்குவது போல இருந்தது. இதனால் விஜய்யை பல்வேறு அரசியல் பிரபலங்களும் விமர்சிக்க துவங்கினார்கள். மேலும், இவரது படங்களுக்கு வேண்டுமென்று பிரச்சனையை சில அரசியல் கட்சியினர் ஏற்படுத்துவதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். ஆனால், விஜய்யின் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக எப்போதும் இருந்து வருகிறார்கள். எப்போதெல்லாம் விஜய் பிரச்சனைகளை சந்திக்கும் போது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு குவிந்து விடுகிறது.

இதையும் பாருங்க : அசிங்கமா இல்லையா இப்படி போஸ் குடுக்க. கமன்ட் செய்த ரசிகருக்கு நடிகையின் பதிலை பாருங்க.

அதிலும் விஜய்யின் வீட்டில் சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு பின்னர் வெற்றியை ரசிகர்கள் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரையை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுவரொட்டி ஒன்றை ஓட்டியுள்ளார் அதில் ஒரு ஆணியும் முடியாது என்ற தலைப்பு போட்டதோடு 'தண்ணியில் வளர்ந்து தவளை கூட்டம் அல்ல தளபதியின் அன்பார்ந்த வாசக கூட்டம்' என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய்யின் ரசிகர்கள் இதுபோல செய்வது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. அதேபோல பொதுவாக விஜய் படங்கள் வெளியாவதற்கு முன்பாக அதில் பல்வேறு அரசியல் ரீதியான எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அதேபோல மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலியில் நடைபெற்ற போது அங்கே பாஜகவினர் சிலர் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தை நடத்தினார்கள். இதன் பின்னரே விஜய் ரசிகர்கள் இது போன்ற செயல்களை செய்வதை கொஞ்சம் அதிகப் படுத்தி உள்ளார்கள் என்றும் கூறலாம்.

behindtalkies AMP · Quick view
View full