அஜய் அப்பா சொல்லும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு, விஜயை கைது செய்யும் போலீஸ் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலா பேட்டி கொடுத்ததை டிவியில் பார்த்து விஜய்யின் தாத்தா, பாட்டி இருவருமே ரொம்ப வருத்தப்பட்டார்கள். ஆனால், விஜய் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கூலாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவிரி, எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்று வாய்ஸ் மெசேஜ் போட்டார். அதைக் கேட்ட விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
அதற்குப்பின் பொருட்காட்சிக்கு வந்த youtuber ஒருவர் காவிரியிடம் விஜய் திருமணத்தைப் பற்றி பேட்டி எடுத்தார். இதனால் கோபப்பட்ட காவிரி, அவரிடம் சண்டை போட்டு போனை கீழே போட்டு உடைத்து விட்டார். பின் தன்னுடைய அம்மாவையும் சமாதானம் செய்து விட்டார். அதற்குப்பின் பொருட்காட்சி இடத்திற்கு விஜய் வந்தார். அங்கு அவரிடம் கடையில் வேலை செய்பவர்கள் மீடியா நபர் செய்த தொந்தரவை சொன்னவுடன் அவர் ரொம்ப வருத்தப்பட்டார். பின் விஜய், காவிரிக்கு ஆறுதலாக பேசி இருந்தார். அப்போது அந்த youtuber மீண்டும் விஜய் வந்திருப்பதை பார்த்து மோசமாக காவிரியை பற்றி பேசி வீடியோ போட்டார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் கோவிலில் வெண்ணிலா, விஜய்க்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய், காவிரியிடம் பேசும் வீடியோவை பார்த்த ராகினி, வெண்ணிலாவிடம் காண்பித்தார். அதை பார்த்தவுடன் வெண்ணிலா கோபத்தில், நான் எதற்கு உயிரோடு இருக்கணும் என்று மண்ணெண்ணெய் ஊத்தப் போனார். அப்போது அங்கு வந்த போலீசார், வெண்ணிலாவை தடுத்து நிறுத்தி விஜய்க்கு போன் செய்து கோயிலுக்கு வரவைத்தார்கள். கோயிலுக்கு வந்த விஜய் இடம் போலீசார் விசாரித்தார். அப்போது வெண்ணிலா, உங்கள் சித்தப்பா தான் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.
நேற்று எபிசோட்:
எங்களிடமிருந்த ஃபோன் எல்லாம் பிடுங்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்றெல்லாம் அழுது புலம்பி இருந்தார். விஜயா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் பேசி இருக்கும் வீடியோவை பார்த்த காவிரியின் குடும்பத்தினர் ஷாக் ஆனார்கள். பின் வீட்டில் உள்ள காவிரியின் பாட்டி, அத்தை இருவருமே காவிரி- விஜய் சேர்த்து வைப்பதை பற்றி பேசி இருந்தார்கள். அவருடைய அம்மாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காவிரியும் அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீஸ், உங்களுக்கு ஏதாவது பணம் வேணும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் வெண்ணிலா கோபப்பட்டு போலீஸ் இடம் சண்டைக்கு போகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று பசுபதி, விஜயின் சித்தப்பாவை உள்ளே வர சொல்கிறார். இன்னொரு பக்கம் காவிரியை சந்திக்க அவருடைய மாமா குமரன் வந்திருக்கிறார். அப்போது அவர், உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று சொல்கிறார். காவிரி தேவையில்லை என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் வீட்டின் ஹவுஸ் ஓனர் காவிரியின் அம்மாவிடம் விஜய் -வெண்ணிலா விவகாரத்தை பற்றி பேசினார். அவர்களுமே, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நீங்க எது பேசுவதாக இருந்தாலும் விஜய்யிடம் பேசுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார். கடைசியில் கோவிலில் விஜயின் சித்தப்பா, வெண்ணிலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டை விட்டு துரத்தியது மட்டுமில்லாமல் அவர்களை ஆக்சிடண்ட் செய்ய சொன்னதும் விஜய் தான். அவர் சொல்லி தான் நான் செய்தேன் என்று ஒரு பொய்யான குற்றசாட்டை வைக்கிறார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆகிறார். விஜய் கோபப்பட்டு அவர் சித்தப்பாவிடம் சண்டைக்கு போகிறார். உடனே போலீஸ் இருவரையும் கைது செய்கிறார்கள். இதை அறிந்த காவிரி ஷாக் ஆகி போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.