மகாநதி சீரியலில் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா? லிஸ்ட் இதோ

By subhashini · 22/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்ற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா ஆவார்கள். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நிவின்- காவிரி காதலித்தார்கள்.

மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்து இருந்தார். இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட காவிரி, பசுபதி முகத்திரையை கிழித்தார். பின் காவிரி குடும்பம் சூழ்நிலை காரணத்தினால் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு சென்று வந்தார்கள். பின் சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் தான் விஜய். பின் காவிரி, விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே சண்டை மட்டும் தான் வந்து கொண்டு இருந்தது.

மகாநதி சீரியல்:

அதற்கு பின் இருவரும் காதலிக்க தொடங்கி கணவன் மனைவியாகவே வாழ ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலா வருகிறார். இதனால் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே ப்ரச்சனை வருகிறது. அதோடு இவர்கள் காண்ட்ராக்ட் திருமணம் தெரிந்தவுடன் காவிரியை, அவர் அம்மா வீட்டில் அழைத்து சென்று விட்டார்கள். பின் வெண்ணிலாவுக்கு பழைய நினைவுகள் வந்து விஜயை காதலிக்கிறார். விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்த கொண்டிருக்கிறார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் காவிரி கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து விஜய்யை பிடிக்க முடியவில்லை. சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். பின் அவர் பார்த்து பார்த்து தன்னுடைய மனைவியை கவனித்துக் கொள்கிறார். இருவருக்கும் இடையே காதலும் அன்பும் அதிகமானது. இன்னொரு பக்கம் வெண்ணிலா, விஜயை திருமணம் செய்ய மீடியாவில் புகார் கொடுத்து பயங்கர கலவரத்தை செய்து கொண்டு இருக்கிறார். இதனால் விஜய்க்கு வெண்ணிலா மீது வெறுப்பு தான் அதிகம் ஆகிறது.

சீரியல் ட்ராக்:

தற்போது சீரியலில் வெண்ணிலா, விஜய்க்காக கோவிலில் காத்து கொண்டு இருக்கிறார். ஆனால், விஜய் கோவிலுக்கு போகாமல் காவிரியை பார்க்க போனார். இதனால் கொந்தளித்த வெண்ணிலா தீக்குளிக்கும் ட்ராமா போட்டார். பின் போலீஸ் விஜயை வரவைத்து விசாரிக்கிறார்கள். இனி அடுத்து என்ன? என்று சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் மகாநதி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள் சம்பளம் விவரம்:

அதாவது, நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்
விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாமிநாதன் - ரூ.15 ஆயிரம்
காவிரியாக நடிக்கும் லட்சுமி ப்ரியா- ரூ.10 ஆயிரம்
குமரனாக நடிக்கும் கமுருதீன் - ரூ.8000
கங்காவாக நடித்து வரும் தாரணி ஹெப்சிபா- ரூ.6 ஆயிரம்
யமுனாவாக நடிக்கும் ஆதிரைக்கு- 5 ஆயிரம் ரூபாய்
நிவின் கேரக்டரில் நடிக்கும் ருத்ரன் - ரூ.10 ஆயிரம்
ராகினி கேரக்டரில் நடிக்கும் சகஸ்திகா - ரூ. 7 ஆயிரம்
பசுபதி கேரக்டரில் நடிக்கும் நடிகர் ரமேஷ் - ரூ.6 ஆயிரம்
தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சோமு - ரூ. 8 ஆயிரம்
கல்யாணி பாட்டியாக நடிப்பவருக்கு - ரூ.4 ஆயிரம்
அஜய் கேரக்டரில் நடித்து வரும் பாஸ்கர் நடராஜன் - ரூ.5 ஆயிரம்
நடிகை சுஜாதா சிவகுமார் - ரூ.7 ஆயிரம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full