மகாநதி சீரியலை விட்டு மீண்டும் விலகும் பிரபலம்? அவரே சொன்ன விஷயம் - அதிருப்தியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்ற9 நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா ஆவார்கள். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நிவின்- காவிரி காதலித்தார்கள்.
மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்து இருந்தார். இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட காவிரி, பசுபதி முகத்திரையை கிழித்தார். பின் காவிரி குடும்பம் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு சென்று வந்தார்கள். பின் சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் தான் விஜய். பின் காவிரி, விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே சண்டை மட்டும் தான் வந்து கொண்டு இருந்தது.
மகாநதி சீரியல்:
அதற்கு பின் இருவரும் காதலிக்க தொடங்கி கணவன் மனைவியாகவே வாழ ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலா வந்தார். விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்தார். ஒருவழியாக வெண்ணிலா, விஜய்-காவேரி வாழ்க்கையை விட்டு போனார். பின் காவிரி கர்ப்பமாக இருக்கிறார். தற்போது சீரியலில் காவிரிக்காக சொத்து, வீடு எதுவும் வேணாம் என்று விஜய் வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் காவேரியின் வீட்டை பசுபதி அபகரித்துக் கொள்கிறார். இதை மீட்டெடுக்க விஜய் போராடுகிறார்.
ஷாதிகா குறித்த தகவல்:
மேலும் இந்த தொடரில் ராகினி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷாதிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்கள் நடித்திருக்கிறார். அதோடு இவர் வெள்ளித்திரைகளிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவர் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது மகாநதி சீரியல் தான். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
ஷாதிகா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஷாதிகா, இந்த சீரியலில் கமிட் ஆகும்போது இவ்வளவு பெரிய நெகட்டிவ் ரோல் என்று எனக்கு தெரியாது. நிறைய பேர் ரொம்ப மோசமாக திட்டினார்கள் அவ்வளவு வெறுப்பு காண்பித்தார்கள். அது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. இது நமக்கு செட்டாகுமா என்ற குழப்பமும் வந்தது. நான் இயக்குனர் பிரவீன் சாரிடம் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னேன். உடனே அவர், கமெண்டெல்லாம் படிக்காதீங்க,. ஃப்ரீயா விடுங்கள் என்று சொன்னார் அதற்கு பிறகு தான் நான் சீரியலில் நம்பிக்கையோடு நடித்தேன் என்று கூறி இருக்கிறார்.