காவிரி பற்றி யாழினி-அம்மு கேட்கும் கேள்வியால் திணறி போகும் இரு குடும்பம்- மகாநதி

காவிரி பற்றி யாழினி-அம்மு கேட்கும் கேள்வி

By subhashini · 8/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் தாத்தா சோமு, காவிரி சொல்வதற்காக நீ அம்முவை எத்தனை ஸ்கூலில் மாற்ற முடியும்? அவளை நினைத்து பார் என்றார். பின் அம்முவிடம் விஜய், நீ காவேரி மிஸ்ஷிடம் ரொம்ப நெருங்கி பழகாதே. எல்லாம் ஸ்டுடென்ட் போலவே நீயும் டிஸ்டன்ஸ் ஓட இரு என்றார். அம்முவும் சரி என்றார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்திற்கு அம்மு வந்திருப்பதை பார்த்து காவிரி சந்தோஷப்பட்டார். காவிரி, அம்முவை கட்டி அணைத்து எமோஷனலாக அழுதார். ஆனால், அம்மு தன் தந்தை சொன்னதை நினைத்து பார்த்து நான் கிளம்புகிறேன் எனக்கு நேரம் ஆகிறது என்று காவேரியை விட்டு விலகி சென்றார். இதை பார்த்து காவிரிக்கு கஷ்டமாக இருக்கிறது.

நர்மதா பிரச்சனையில் இருப்பதை அறிந்து காவிரி-கங்கா வருத்தப்பட்டார். நர்மதாவை அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒருவர், காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்தார். இதனால் நர்மதா ரொம்பவே உடைந்து விட்டார். இந்த விஷயம் அறிந்து காவிரி வீட்டில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். சாரதா மட்டும் நர்மதாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் இதை அறிந்த விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று காவிரி குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார்.

மகாநதி:

பின் நர்மதாவை காதலிக்கும் நபர் வீட்டிற்க்கே வந்து எல்லோரிடமும் மிரட்டிக்கொண்டு இருந்தார். அப்போது வந்த விஜய், அந்த நபரை தனியாக ரூமுக்கு அழைத்து சென்று மிரட்டினார். அந்த நபர் பயந்து கொண்டு நர்மதாவிடமும் வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார். விஜய் செய்த உதவியை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். நர்மதா, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் சாரதா புரிந்து கொள்ளாததால் கோபப்பட்டு சண்டை போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராதா, விபத்தினால்தான் உன் அம்மாவிற்கு பழைய நினைவுகள் வரவில்லை. சீக்கிரத்திலேயே உன்னுடைய அம்மா உன்னிடம் வந்து விடுவார். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. உன் அம்மாவை தப்பா நினைக்காதே என்றெல்லாம் சொல்கிறார். காவிரி தான் தன் அம்மா என்று தெரிந்ததும் அம்முவால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக நிற்கிறார். அதற்குப்பின் வீட்டில் யாரிடமும் பேசாமல் அம்மு தனியாகவே இருக்கிறார். காவிரி. விஜய், தாத்தா எல்லோருமே அம்முவிடம் பேசுகிறார்கள். ஆனால், அம்மு யாருக்குமே பதில் கொடுக்காமல் உள்ளே சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

ராதாவும் எதுவும் சொல்லாமல் தயங்கி நிற்கிறார். இன்னொரு பக்கம் யாழினி, காவிரியின் புகைப்படத்தை காண்பித்து அம்முவின் அம்மாவும் காவிரி சித்தியும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். அது எப்படி? அம்மு காவிரி சித்தியை தான் தன்னுடைய அம்மா என்று சொல்கிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றெல்லாம் கேட்கிறார். கங்கா- சாரதா இருவரும் ஷாக் ஆகிறார்கள். யாழினி இடம் கங்கா ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்பி விடுகிறார். அதற்குப் பின் அம்மு சரியாக பேசாததால் காவேரி சோகமாக இருக்கிறார். வீட்டுக்கு வந்த காவிரி எதுவும் சொல்லாமல் அம்மு நடந்து கொண்டதையே நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full