வீட்டை விற்பதில் வன்மத்தை கொட்டும் கங்கா-யமுனா, காவிரி விட்ட சவால் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 7/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நர்மதா தவறுதலாக மத்தாப்பு கம்பியை கங்காவின் கை மேல் பட்டுவிட்டது. இதனால் கங்கா ஒரே அலப்பறை செய்தார். ஆனால், அவருக்கு கையில் பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் கங்கா வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார். இதை புரிந்து கொண்ட விஜய், ஹாஸ்பிட்டல் போகலாம் என்று சொன்னவுடன் கங்கா ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே தீபாவளிக்காக தயாராகி வந்தார்கள். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் கங்கா மட்டும் கோபமாக இருந்தார்.

எல்லோருமே சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். பின் விஜய், நீங்கள் கொடைக்கானல் வீட்டை விற்பதாக இருந்தால் நானே வாங்கிக் கொள்கிறேன். காவிரி பெயரில் எழுதிக் கொடுங்கள். மார்க்கெட்டில் என்ன தொகை போகிறதோ அதே வாங்கிக் கொள்கிறேன். நான் குறைவாக எல்லாம் கேட்க மாட்டேன். வெளியில் வீட்டை விற்பதற்கு காவிரிக்கு விருப்பமே இல்லை. உங்களுக்கு பண தேவை என்பதால் நானே வாங்கிக் கொள்கிறேன். அந்த வீடு காவிரி பெயரில் இருந்தாலுமே உங்கள் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. நீங்கள் எல்லோருமே அங்கு போகலாம், வரலாம் என்றார்.

மகாநதி:

இதை கேட்டவுடன் சாரதா சந்தோஷப்பட்டார். ஆனால், கங்கா-யமுனாவிற்கு விருப்பமே கிடையாது. கங்கா அதெல்லாம் முடியாது என்றார். அதற்குப்பின் சாரதா, காவிரி பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறாய் என்றார். அதற்கு கங்கா, அதெல்லாம் முடியாது. அது அவர் பெயரில் கொடுத்தால் நமக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும் என்றார். பின் சாரதா, யாரோ எடுத்துச் செல்வதற்கு காவிரி பெயரில் இருந்தால் நம்முடைய வீடு நம்மிடமே இருக்கும். எதற்கு அவள் மீது இவ்வளவு பொறாமைப்படுகிறீர்கள் என்றெல்லாம் திட்டினார். இருந்தாலுமே கங்கா- யமுனா கேட்கவில்லை. இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரிக்கு போன் செய்து கங்கா- யமுனா இருவரும் பேசுகிறார்கள். அப்போது கங்கா, நீ கொடைக்கானல் வீட்டை வாங்க போறியா? என்று கேட்கிறார். அதற்கு காவிரி,
எல்லோரும் முன்பு தானே சொன்னேன். வேறு ஒருவர் வாங்குவதற்கு நான் வாங்கினால் அது நம்முடையதாகவே இருக்கும். எனக்கு அந்த வீடு யார் கைக்கு போகக்கூடாது. அது அப்பாவுடைய வீடு என்று ரொம்ப சென்டிமெண்டாக பேசுகிறார். இதை கேட்டு கடுப்பான கங்கா, நாங்கள் வீட்டை விற்கத் தான் போகிறோம். ஆனால், உனக்கு கொடுக்க முடியாது. வீட்டை வாங்கும் எண்ணத்தை விட்டு விடு என்றெல்லாம் இருவரும் சேர்ந்து மிரட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

உடனே காவிரி, வீட்டை விற்றால் நான் தான் வாங்குவேன். என்ன பண்ண முடியுமோ பண்ணிக் கொள்ளுங்கள் என்று பதிலுக்கு பதில் சவால் விட்டு போனை வைத்து விடுகிறார். அதற்குப்பின் கங்கா- யமுனா பேசியதை பற்றி விஜய்யிடம் சொல்லி காவிரி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். விஜய், இரண்டு பேரையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நீ கொஞ்சம் வசதியாக இருக்கிறாய். அந்த பொறாமையில் கூட அவர்கள் இப்படி சொல்லலாம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் சாரதா, தன் மகள்களை வீட்டிற்கு வரவைக்கிறார். அப்போது கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி சாரதா பேசுகிறார். கங்கா, காவிரிக்கு கொடுக்கக் கூடாது. எனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடலாம் என்கிறார். அதற்கு காவேரி, அந்த வீட்டை நான் தான் வாங்குவேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full