விஜய்-வெண்ணிலா இடையே நடக்கும் காரசார வாக்குவாதம், காவிரி நிலை என்ன? மகாநதி

By subhashini · 21/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலா, எனக்கு கல்யாணம் செய்ய வேண்டும். மாப்பிள்ளை நீதான். நாளை உனக்கும் எனக்கும் கோயிலில் தான் கல்யாணம். உன்னை எப்படி வர வைக்கணும் என எனக்கு தெரியும் என்று சவால் விட்டார். ஆனால், விஜய் அது எல்லாம் கண்டு கொள்ளாமல் காவிரி தான் தன்னுடைய மனைவி என்பதில் உறுதுணையாக இருக்கிறார். மறுநாள் காலையில் வெண்ணிலா திருமண கோலத்தில் தயாராகி கோவிலில் காத்துக் கொண்டிருந்தார். மீடியாக்கள் வெண்ணிலாவிடம் பேட்டி எடுத்தார்கள். அப்போது வெண்ணிலா, விஜய் கண்டிப்பாக வருவார். விஜய் என்னைத்தான் காதலிக்கிறார் என்றெல்லாம் காவிரி குடும்பத்தின் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தி இருந்தார்.

இதை டிவியில் பார்த்த காவிரி பெரிதாக கண்டுகொள்ளாமல் பொருட்காட்சிக்கு கிளம்ப பார்த்தார். அப்போது அவர் அம்மா, நீ வெளியில் போக வேண்டாம். வீட்டிலேயே இரு என்றார். ஆனால், காவேரி பொருட்காட்சிக்கு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் டிவியில் வெண்ணிலா பேசுவதை பார்த்து கோபப்பட்டு நிவின், வெண்ணிலாவை திட்டிக் கொண்டிருந்தார். இதை பார்த்த யமுனா, உங்களுக்கு நிஜமாகவே விஜய்- காவேரி சேர்வதில் சந்தோஷமா? என்று கேட்டார். அதற்கு நிவின், ஆமாம். உன்னை போல் என்னால் அவர்களை பிரித்த குற்ற உணர்ச்சியில் இருக்க முடியாது. அவர்களை சேர்த்து வைக்க தான் முயற்சி செய்வேன் என்றார். அதற்கு யமுனா, நிவினையும்-காவிரியும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் கோபப்பட்டு நிவின், யமுனாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் வெண்ணிலா பேட்டி கொடுத்ததை டிவியில் பார்த்து விஜய்யின் தாத்தா, பாட்டி இருவருமே ரொம்ப வருத்தப்பட்டார்கள். ஆனால், விஜய் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கூலாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவிரியும் எதையும் கண்டுகொள்ளாமல் பொருட்காட்சிக்கு கிளம்பி இருந்தார். அப்போது காவிரி, எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்று வாய்ஸ் மெசேஜ் போட்டார். அதைக் கேட்ட விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அதை தன் தாத்தா, பாட்டி இடமும் காண்பித்து அவர்களையும் சமாதானம் செய்தார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் பொருட்காட்சிக்கு வந்த காவிரியின் அம்மா, அங்கு வேலைக்கு இரண்டு பேர் இருப்பதை பார்த்து கேட்டார். காவிரியும் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். அப்போது youtuber ஒருவர் காவிரியிடம் விஜய் திருமணத்தைப் பற்றி பேட்டி எடுத்தார். இதனால் கோபப்பட்ட காவிரி, அவரிடம் சண்டை போட்டு போனை கீழே போட்டு உடைத்து விட்டார். பின் தன்னுடைய அம்மாவையும் சமாதானம் செய்து விட்டார். அதற்குப்பின் பொருட்காட்சி இடத்திற்கு விஜய் வந்தார். அங்கு அவரிடம் கடையில் வேலை செய்பவர்கள் மீடியா நபர் செய்த தொந்தரவை சொன்னவுடன் அவர் ரொம்ப வருத்தப்பட்டார். பின் விஜய், காவிரிக்கு ஆறுதலாக பேசி இருந்தார். அப்போது அந்த youtuber மீண்டும் விஜய் வந்திருப்பதை பார்த்து மோசமாக காவிரியை பற்றி பேசி வீடியோ போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் வெண்ணிலா, விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய், காவிரியிடம் பேசும் வீடியோவை பார்த்த ராகினி, வெண்ணிலாவிடம் காண்கிறார். அதை பார்த்தவுடன் வெண்ணிலா கோபத்தில், நான் எதற்கு உயிரோடு இருக்கணும் என்று மண்ணெண்ணெய் ஊத்தப் போகிறார். அப்போது அங்கு வந்த போலீசார், வெண்ணிலாவை தடுத்து நிறுத்தி விஜய்க்கு போன் செய்து கோயிலுக்கு வரவேற்கிறார்கள். கோயிலுக்கு வந்த விஜய் இடம் போலீசார் விசாரிக்கிறார்கள். அப்போது வெண்ணிலா, உங்கள் சித்தப்பா தான் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.

சீரியல் ட்ராக்:

ங்களிடமிருந்த ஃபோன் எல்லாம் பிடுங்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்றெல்லாம் அழுது புலம்புகிறர். விஜயா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் பேசி இருக்கும் வீடியோவை பார்த்த காவிரியின் குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள். பின் வீட்டில் உள்ள காவிரியின் பாட்டி, அத்தை இருவருமே காவிரி- விஜய் சேர்த்து வைப்பதை பற்றி பேசுகிறார்கள். அவருடைய அம்மாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் காவிரியும் அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆனார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full