கோலாகலமாக நடக்கும் காவிரியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் மொத்த குடும்பம் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா கையும் களவுமாக மாட்டியதால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றார். விஜய், இனிமேல் நீங்கள் எந்த வேலையும் செய்ய தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள். இன்னொரு பக்கம் பாட்டிக்கு மருந்து மாத்திரை எல்லாம் சிந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கங்கா மயங்கி கீழே விழப்போனார்.
உடனே சிந்து அவரை பிடித்து உட்கார வைத்து செக் செய்தார். அப்போது கங்கா சரியாக சாப்பிடாமல் இருந்ததால் பிபி லோவாகி இருப்பது தெரிய வருகிறது. அதற்குப்பின் சிந்து, கங்காவிற்கு முதலுதவி செய்து சாப்பாடு கொண்டு வந்து தந்தார். அதற்கு பின் கங்கா உடல்நிலை சரியாக இருந்தது. இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் வளைகாப்பு நடக்க இருப்பதால் இருவருக்கும் துணி எடுக்க கடைக்கு சென்று இருந்தார்கள். அங்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு துணியையும் காவிரி செலக்ட் செய்து இருந்தார்.
மகாநதி:
விஜய்- காவிரி இருவரும் வீட்டில் உள்ள எல்லோருக்குமே துணி எடுத்துக்கொண்டு வந்தார்கள். காவிரி தன்னுடைய வீட்டில் உள்ள எல்லோருக்கும் துணி கொடுத்து விட்டு முத்து மலர் குடும்பத்திற்கும் துணி எடுத்திருக்கும் விஷயத்தை தன் அம்மாவிடம் சொன்னார். முதலில் கோவப்பட்ட சாரதா, பிறகு கொடுப்பதற்கு ஒத்து கொண்டார். பின் துணிகளை எல்லாம் முத்துமலர் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு வளைகாப்பிற்கு கூப்பிட்டார் காவிரி. அதற்குப்பின் விஜய் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
பின் காவிரி, நம் கஸ்டமர்ஸ் எல்லோரையும் கூப்பிடலாம். இது கொஞ்சம் சுயநலமாக இருந்தாலும் அவர்கள் நமக்காக டைம் கொடுத்ததற்கு நம்முடைய விசுவாசமாக இருக்கட்டும். அவர்களுடன் நமக்கு நல்ல உறவு ஏற்படும் என்று சொன்னார். பின் காவிரி, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி அழைத்தார். இதை பார்த்து கிருஷ்ணாவுமே ஃபீல் பண்ணுகிறார். பின் கிருஷ்ணா, காவிரியின் நல்ல மனதை பாராட்டினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரியின் வளைகாப்பிற்காக விஜய் சூப்பராக ஏற்பாடு செய்திருக்கிறார். அதை பார்த்து காவேரி அசந்து போய்விடுகிறார். பின் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. விஜயின் குடும்பத்தார், உற்ற உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே விழாவிற்கு வருகிறார்கள். காவிரி ரொம்ப அழகாக தயாராகி இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே காவிரி- விஜய் நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். சாரதா, தன் கணவர் இந்த நேரத்தில் இல்லாததை நினைத்து வருத்தப்படுகிறார். பின் நல்லபடியாக வளைகாப்பு விழா துவங்குகிறது. காவிரியின் அழகை கண்டு விஜய் ரசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது