ஜெயிலுக்கு சென்றும் திருந்தாத பசுபதி, பதிலுக்கு பதில் சவால் விடும் காவிரி - பரபரப்பில் மகாநதி

By subhashini · 24/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வெண்ணிலா, என்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டது பசுபதி தான். விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெய்து விஜயை விடுதலை செய்யுங்கள் என்று எல்லாம் நடந்த எல்லா உண்மையை சொன்னார். இதனால் நீதிபதி விஜயை விடுதலை செய்தது. அதோடு பசுபதியை கைது செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவு போட்டார்கள். பின் வீட்டிற்கு விஜயை அழைத்து வந்து எல்லோருமே ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். அதோடு பசுபதியை போலீஸ் கைது செய்ததாக கூறப்படத்துகிறது. ஆனால், காவேரி, விஜயை விட்டு போவதை நினைத்து மனதுக்குள்ளே வேதனைப்பட்டு கொண்டிருந்தார்.

விஜய் வெளியே வந்ததால் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பாட்டி மட்டும் கோபத்தில் ரூமிற்கு சென்று விட்டார். அப்போது காவிரியை பார்த்து பாட்டி பயங்கரமாக திட்டினார். உன்னால் தான் என் பேரனுக்கு இந்த நிலைமை என்று சொல்வதால் காவிரியால் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி ஒவ்வொரு ரூமாக சென்று விஜய் உடன் இருந்த பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வெண்ணிலா அங்கு வந்தார். அப்போது காவிரி, வெண்ணிலாவிற்கு நன்றி சொன்னார்.

மகாநதி:

உடனே வெண்ணிலா, நீ சொன்னது போல் நான் செய்து விட்டேன். நீ எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவாயா? என்று கேட்டார். அதற்கு வெண்ணிலா, இனி விஜய்- காவேரி கிடையாது. நான் சொன்னது போல் விஜயின் வாழ்க்கை விட்டு போகிறேன். நீ பத்திரமாக விஜய்யை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். உடனே விஜய், காவிரி என்னுடன் இங்கே இரு என்று சொன்னார். ஆனால், காவேரி கேட்காமல் விஜய்யை உதாசீனப்படுத்திவிட்டு சென்றார். விஜய்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் வெண்ணிலா, தான் செய்த தவறுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு விஜய் அவருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார். அந்த சமயம் பார்த்து வெண்ணிலாவின் மாமா வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது அவர், விஜயின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு வெண்ணிலாவை நானே அழைத்துச் செல்கிறேன் என்கிறார். உடனே விஜய்யின் தாத்தா, நாளை செல்லுங்கள் என்று சொல்வதால் வெண்ணிலாவின் மாமாவும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற காவிரியை பார்த்து அவருடைய அம்மா, எங்கே போனாய்? விஜய்யை பார்த்தாயா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு காவிரி, ஆமாம் நான் விஜயை வெளியே எடுக்க தான் போனேன். பசுபதியால் விஜய் மாட்டிக் கொண்டார். அதனால் தான் நான் விஜய்க்கு உதவி செய்தேன். உன்னிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி நான் எதையும் செய்ய மாட்டேன். நீ பயப்படாதே என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். பின் காவிரி, விஜய்யை விட்டு பிரிந்து போவதை நினைத்து ரொம்ப எமோஷனலாக கதறி அழுது கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். காவிரிக்கு மெசேஜ், போன் எல்லாம் விஜய் பண்ணுகிறார். ஆனால், காவேரி எந்த ரிப்ளைமே செய்யவில்லை. விஜய்க்கு என்னவோ பிரச்சனை இருக்கிறது என்று புரிகிறது. இன்னொரு பக்கம் காவேரி, விஜயை மறக்கவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் ரொம்பவே வேதனை பட்டுக் கொண்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=6k1_KtugFCs

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் காவிரி, குமரன் இருவருமே பசுபதியை பார்ப்பதற்காக ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது காவிரி, இப்படித்தானே என்னுடைய விஜயும் இந்த இடத்தில் நின்று இருந்தார். இனி நீ வெளியிலேயே வர முடியாது. நீ ஏதாவது பிரச்சனை செய்ய நினைத்தால் நாலு பக்கமும் உனக்கு சங்கு சத்தம் தான் என்று சொல்கிறார். உடனே பசுபதி, இன்னும் இரண்டு நாட்களில் வெளியே வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விடுகிறார். இதனால் காவிரியுமே பதிலுக்கு பதில் சவால் விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full