சாரதாவுடன் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், விஜய்-காவிரி என்ன செய்ய போகிறார்கள்? மகாநதி

By subhashini · 25/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

காவேரி, வீட்டில் உண்மை தெரிந்து என்ன சொல்வார்களோ? என்று புலம்பி கொண்டிருந்தார். விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் தைரியமாக இது என்றார். பின் காவிரி- விஜய் இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் பாட்டி, தாத்தா, சித்தப்பா எல்லோருமே விசாரித்தார்கள். விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்தார். சித்தப்பா, இல்லையே காவேரி அப்பாவிற்கு இரண்டு பொண்டாட்டி. அவர்களால்தான் சொத்தை மாற்ற முடியவில்லை. பங்கு கேட்டு பிரச்சினை செய்கிறார்களே என்று நடந்ததை எல்லாம் நேரில் பார்த்தது போலவே சென்றார்.

மகாநதி:

பின் பாட்டி, காவிரியின் குடும்பத்தையும் காவிரியையும் பற்றியும் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட விஜய், எல்லோரிடமும் சண்டை போட்டு இனிமேல் காவிரியை பற்றி யாரும் பேசக்கூடாது என்று ரூமிற்கு சென்று விட்டார். இருந்தாலுமே காவேரி, பாட்டி சொன்னதையும், தன் அப்பா செய்த துரோகத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் சாரதா, சந்தானம் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக உடைந்து போய் அழுதார். கங்கா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் சாராதவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து மலர் குடும்பத்தினர் சாரதா இருக்கும் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். சாரதா, கங்கா எல்லோருமே முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொல்கிறார்கள். ஆனால், முத்துமலர் குடும்பத்திலிருந்து யாருமே வெளியே போக முடியாது என்று வீட்டுக்குள் உட்கார்ந்து பிரச்சனை செய்கிறார்கள். சொத்தை பிரித்து தரும் வரை இங்கதான் இருப்போம் என்று சொல்கிறார்கள். இதனால் சாரதா, காவிரிக்கு போன் செய்கிறார். ஆனால், போனை பாட்டி, சித்தி இருவரும் தான் எடுத்து பேசுகிறார்கள். பின் அங்கு நடக்கும் பிரச்சனை எல்லாம் சாரதா அவர்களிடம் சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் வந்த காவிரி போனை வாங்கி தன்னுடைய அம்மாவிடம் பேசுகிறார். அப்போது முத்துமலர் குடும்பம் வந்த விஷயத்தைப் பற்றி சாரதா சொன்னவுடன் காவேரி பதறி கொண்டு கிளம்ப தயாராகிறார். உடனே பாட்டி, தாத்தா எல்லோருமே தினமும் ஒரு பிரச்சனை வருவதா? என் பேரனுக்கு இது எல்லாம் தலையெழுத்தா? என்று காவிரி குடும்பத்தை திட்டிக் கொண்டிருக்கிறார். விஜய், அமைதியாக இருங்கள். நான் வந்து பேசுகிறேன் என்று காவிரியை அழைத்துக் கொண்டு வருகிறார்.. பின் காவிரி, என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று எமோஷனலாக பேசுகிறார். அதற்கு விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நீ தைரியமாக இரு என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full