ஆவேசத்தில் பொங்கும் காவிரி, பசுபதியை அடி வெளுத்து வாங்கிய விஜய் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 6/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி வீட்டிற்கு வந்தவுடன் விஜய் சித்தி வீட்டிற்கு வந்த விஷயத்தை சொன்னார்கள். அதன் பின் வீட்டுக்கு வந்த விஜய், நான் காவிரியை என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன் என்று சொன்னார். உடனே காவிரி அம்மா, அதெல்லாம் நடக்காத விஷயம். தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்கள் என்றார். அதற்கு விஜய், காவிரி இல்லாமல் நான் இங்கு இருந்து போக மாட்டேன். நானும் காவிரியும் எப்படி வாழ்ந்தோம் என்று தெரியுமா? காவிரியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கேட்டார். ஆனால், காவிரி காவிரியின் அம்மா முடியாது என்று அடம் பிடிக்கிறார்.

பின் காவிரியின் அம்மாவிற்கும் விஜய்க்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் கோபப்பட்ட காவிரி, எனக்கு உங்களுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. நீங்கள் கிளம்பவில்லை என்றால் என் பிணத்தை தான் பார்ப்பீர்கள் என்று மோசமாக பேசி விட்டார். இதனால் உடைந்து போன விஜய் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் காவிரி வீட்டுக்கு வராததை பார்த்து விஜய்யின் பாட்டி, சித்தி இருவருமே உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் காவிரியிடம் நிவின், விஜயை திட்டி அனுப்பியதற்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். காவிரியுமே உண்மையை சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் குமரன், விஜயின் சித்தி வீட்டில் வந்து பேசியதால் தான் காவேரி மனம் மாறி இருந்தார். மற்றவர்களுக்காக உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் என்றார். பின் நிவின், குமரன் இருவருமே விஜயிடம் பேச போனார்கள். ஆனால், காவேரி தடுத்து நிறுத்தி, என்னால் விஜயின் வாழ்க்கையில் பிரச்சனை வேண்டாம் என்று அழுது கொண்டு சென்று விட்டார். அதற்குப்பின் காவிரியை பார்த்த பாட்டி, இவள் தான் மாசமாக இருப்பது போல் தெரிகிறது. நாளுக்கு நாள் இவள் வயிறு பெருசாகிறது என்று சொன்னார். ஆனால் காவேரி அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தன் பாட்டியை திட்டி அனுப்பி விட்டார். இதையெல்லாம் பார்த்து காவிரியின் அம்மாவிற்கு சந்தேகம் வந்தது.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் காவிரியை நினைத்து விஜய் ரொம்பவே எமோஷனலாக அழுது பேசிக்கொண்டிருந்தார். அப்போது விஜயின் பாட்டி, காவிரியால் தான் எல்லா பிரச்சனையும் வந்தது. அவளை விட்டு நீ உன்னுடைய வாழ்க்கையை பார் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். இதனால் விஜய் கோவப்பட்டார். அப்போது விஜயின் சித்தி, பசுபதி நாளை ஜாமினில் வெளியே வருகிறார் என்ற விஷயத்தை சொன்னார். இதனால் கோபப்பட்ட விஜய், அவனை நான் சும்மா விடமாட்டேன் என்று கொந்தளித்தார். இதனால் விஜய்யின் பாட்டி திட்டி இருந்தார். அதற்குப்பின் ஜாமினில் வெளியேவந்த பசுபதி நேராக காவிரியின் வீட்டிற்கு தான் வந்தார். அங்கு காவிரியின் அம்மாவிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார் பசுபதி.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் பசுபதி, உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன். எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து செய்கிறேன் என்றெல்லாம் பயமுறுத்துவது போல் பேசுகிறார். உடனே கோபத்தில் காவிரி, பசுபதியை தீட்டு விட்டு உன்னை முடித்துவிட்டு நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று ஆவேசப்படுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே காவிரியை தடுத்து விடுகிறார்கள். பசுபதியும், காவிரியிடம் சவால் விட்டு கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷன் என்ற காவிரி, பசுபதியை எப்படி வெளியில் விட்டீர்கள். அவன் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறான் என்றெல்லாம் கோபப்படுகிறார். உடனே போலீஸ், நீங்கள் புகார் கொடுத்து விட்டு போங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு சென்ற பசுபதி, காவேரிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னால் நான் எதற்காக விஜய்க்கு தொல்லை தருவேன் என்கிறார். உடனே பாட்டி, இனி காவிரிக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து என் பேரனை தொந்தரவு செய்யாதே என்று சொல்கிறார். பசுபதி, இந்த வார்த்தையை உங்கள் பேரன் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். நான் கிளம்பி விடுவேன் என்கிறார். இதையெல்லாம் கேட்ட விஜய் கோபத்தில் பசுபதியை எட்டி உதைத்து வெளுத்து வாங்குகிறார். தடுக்க வந்த ராகினியை தள்ளி விடுகிறார். பின் விஜய், நான் ஏன் காவிரியை மறக்கனும் என்று மிரட்டி வெளியே அனுப்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full