பசுபதியால் வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட விபரீதம், விஜய் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 4/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலா, பொய் சொல்லி என்னை ஏமாற்றுகிறாய். விஜய்யை திருமணம் செய்து வைக்கிறேன் என்று என்னை ஏமாற்றி விட்டாய் என காவிரியை மோசமாக திட்டி இருந்தார். உடனே காவேரி, நீ செய்த பித்தலாட்ட வேலையுடன் நான் ஒன்னும் செய்து விடவில்லை. விஜய்யை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன். உன்னிடம் நேர்மை இல்லை. அதனால் நானும் உன்னை ஏமாற்றினேன் என்று சொன்னார். வெண்ணிலாவால் எதுவும் பேசமுடியவில்லை. விஜய்-காவிரி இருவருமே வெண்ணிலாவிற்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சொன்னார்கள்.

இன்னொரு பக்கம் காவிரி வீட்டுக்கு வராததால் மொத்த குடும்பமே பதறிக் கொண்டிருக்கின்றது. அப்போது நிவின், காவிரி- விஜய்க்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். உடனே யமுனா, நிவினை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். அப்போது யமுனா மோசமாக காவிரியையும் நிவினையும் இணைத்து வைத்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு நிவின், யமுனாவை அடித்து விட்டார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். யமுனாவிடம் விசாரித்தார்கள். இன்னொரு பக்கம் காரில் விஜய்- காவிரி இருவருமே சந்தோசமாக ரொமான்டிக்காக பேசிக்கொண்டு வந்தார்கள்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் நிவின், யமுனாவை அடித்ததை நினைத்து வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது கங்கா, அவள் வாய்க்கொழுப்பு அதனால்தான் அடித்திருப்பார் என்று உண்மையை சொன்னார். யமுனாவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி இருந்தார். குமரன், யமுனாவை அவருடைய வீட்டில் விட்டு நடந்ததை விசாரித்தார். அப்போது யமுனா, காவிரி- நிவினை பற்றி சேர்த்து வைத்து பேசினார். உடனே குமரன், அப்படியெல்லாம் யோசிக்காதே என்று அறிவுரை சொன்னார். அதற்கு பின் நிவினிடம் குமரன் பேசி இருந்தார். அப்போது நிவின், நான் செய்தது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் குமரன், காவிரிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது காவிரி-விஜய் உடன் இருப்பது குமரனுக்கு தெரிய வந்தது. பின் வீட்டில் குமரன், பொருட்காட்சியில் வேலை இருக்கிறது. அதனால் காலை தான் காவிரி வருவார் என்று ஏதேதோ சொல்லி சமாளித்து வந்தார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவருமே ரொம்ப சந்தோஷமாக காரில் பேசிக் கொண்டு வந்தார்கள். இன்னொரு பக்கம் வெண்ணிலா, பசுபதியையும் ராகினியையும் திட்டிக் கொண்டிருந்தார். உங்களால் தான் விஜய் என்னை தப்பாக புரிந்து கொண்டு வெறுக்கிறான் என்று கோபப்பட்டு திட்டி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் வெண்ணிலா-பசுபதி இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் கோபத்தில் பசுபதி, வெண்ணிலாவிடம் வீண் வம்பு வாங்கினார். பின் பசுபதி, வெண்ணிலாவை அடிக்கிறார். இதனால் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். இதை பார்த்து எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். இன்னொரு பக்கம் காவிரியை வீட்டில் கொண்டு வந்து விடுகிறார் விஜய். அப்போது காவிரி அம்மா, எங்க போயிருந்தாய்? ஏன் இப்படி செய்கிறாய்? என்று அவரிடம் சண்டைக்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:

குமரன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் காவிரி அம்மா கேட்கவில்லை. இனிமேல் இப்படி செய்யாதே என்று காவிரியை திட்டுகிறார். விஜய் விஷயத்தையும் மறக்க சொல்கிறார். அதனால் காவிரியால் எதுவுமே சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மாமா, அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல பசுபதி இடம் கெஞ்சுகிறார். பசுபதி, விஜயின் மீது பழி போடுவதற்கான வேலைகளை ஏற்பாடு செய்கிறார். நான் சொல்வதைப் போல் நீ சொல்லித் தரணும் என்று வெண்ணிலாவின் மாமாவையும் மிரட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full