போலீஸ் ஸ்டேஷனில் ராகினியை வெளுத்து வாங்கிய காவிரி, விஜய்யின் நிலை என்ன? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜய் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீஸ், உங்களுக்கு ஏதாவது பணம் வேணும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொன்னார். இதனால் வெண்ணிலா கோபப்பட்டு போலீஸ் இடம் சண்டைக்கு போனார். இதுதான் சந்தர்ப்பம் என்று பசுபதி, விஜயின் சித்தப்பாவை உள்ளே வர சொன்னார். இன்னொரு பக்கம் காவிரியை சந்திக்க அவருடைய மாமா குமரன் வந்திருந்தார். அப்போது அவர், உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று சொன்னார். காவிரி தேவையில்லை என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.
இன்னொரு பக்கம் வீட்டின் ஹவுஸ் ஓனர் காவிரியின் அம்மாவிடம் விஜய் -வெண்ணிலா விவகாரத்தை பற்றி பேசினார். அவர்களுமே, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நீங்க எது பேசுவதாக இருந்தாலும் விஜய்யிடம் பேசுங்கள் என்று சொல்லி அனுப்பி இருந்தார். கடைசியில் கோவிலில் விஜயின் சித்தப்பா, வெண்ணிலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டை விட்டு துரத்தியது மட்டுமில்லாமல் அவர்களை ஆக்சிடண்ட் செய்ய சொன்னதும் விஜய் தான். அவர் சொல்லி தான் நான் செய்தேன் என்று ஒரு பொய்யான குற்றசாட்டை வைத்தார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆனார். விஜய் கோபப்பட்டு அவர் சித்தப்பாவிடம் சண்டைக்கு போனார். உடனே போலீஸ் இருவரையும் கைது செய்தார்கள்.
மகாநதி சீரியல்:
போலீஸ் ஸ்டேஷனில் விஜய் மற்றும் அஜய் அப்பாவின் தரப்பு நியாயத்தை விசாரித்தார்கள். விஜய், தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தார். அஜய் அப்பா, அவன் சொல்வதெல்லாம் பொய். டிராமா போடுகிறான் என்று பேசி இருந்தார். இன்னொரு பக்கம் காவிரி, விஜய் பார்க்க ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது விஜயின் தாத்தாவிற்கு ஃபோன் செய்து நடந்த விபரத்தை சொன்னார் காவிரி. பின் போலீஸ் ஸ்டேஷன் வந்த காவிரி, விஜயை பார்த்து அவருக்கு ஆறுதல் சொன்னார். அப்போது வந்த வெண்ணிலா, நீ எதற்கு விஜயிடம் பேசுகிறாய்? என்று கேட்டார். உடனே காவிரி, விஜயின் மனைவி நான் மட்டும் தான்.
கடந்த வாரம் எபிசோட்:
எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. யாருக்காகவும் விஜய் விட்டு தர மாட்டேன் என்று பேசி இருந்தார்.
இதனால் வெண்ணிலா கோபப்பட்டு காவிரியிடம் சண்டைக்கு போனார். பின் காவிரி- வெண்ணிலா இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது வந்த போலீஸ், அவர்களின் சண்டையை நிறுத்தி பஞ்சாயத்து விசாரித்தார். இரு தரப்பிலுமே மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்தார்கள். உடனே போலீஸ், விஜய் -அஜய் அப்பாவை தவிர எல்லோரையும் வெளியே போக சொல்லி விட்டார். பின் காவிரி வரவில்லை என்று அவருடைய வீட்டில் இருந்து போன் செய்தார்கள். காவிரியும் என்னவோ சொல்லி சமாளித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராகினி, உன் புருஷனை இனிமேல் வெளியே எடுக்க முடியாது. விஜயை தொக்காக உள்ள வைத்து விட்டோம். வெண்ணிலாவுக்கு கிடைக்காத விஜய் உனக்கும் கிடைக்கக்கூடாது என்றெல்லாம் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். உடனே கோபத்தில் கோபத்தில் காவிரி, ராகினியை அடித்து விடுகிறார். இதனால் பசுபதி, காவிரியிடம் சண்டைக்கு போகிறார். பின் சண்டையில் ராகினி, காவிரியை அடித்து விடுகிறார். பின் இருவருக்கும் இடையே கலவரம் வெடிக்கிறது. அங்கிருந்த போலீஸ்
இருவரையும் விலக்கி விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது அங்கு வந்த விஜய்யின் தாத்தா, எதற்கு தேவையில்லாமல் சண்டை போடுகிறார் காவிரி. இவர்களைப் பற்றி நமக்கு தெரியும் தானே என்று காவிரியை அழைத்து செல்கிறார். அதற்கு பின் வழக்கறிஞர், ஏதாவது குழு கிடைத்தால் கூட விஜய்யை அழைத்து வந்துவிடலாம். இன்னும் விஜய் மீது எப்ஐ ஆர் போடவில்லை என்று சொல்கிறார். உடனே காவிரி, விஜயின் சித்தியை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். பின் காவிரி-விஜயின் தாத்தாவும் சித்தி வீட்டுக்கு போகிறார்கள். அங்கு தாத்தா, விஜய்யின் நிலைமை பற்றி எடுத்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது