விஜய்க்கு எதிராக போலீஸிடம் புகார் கொடுத்த வெண்ணிலா, காவிரி என்ன செய்ய போகிறார்? மகாநதி

By subhashini · 23/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் கோவிலில் வெண்ணிலா, விஜய்க்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய், காவிரியிடம் பேசும் வீடியோவை பார்த்த ராகினி, வெண்ணிலாவிடம் காண்பித்தார். அதை பார்த்தவுடன் வெண்ணிலா கோபத்தில், நான் எதற்கு உயிரோடு இருக்கணும் என்று மண்ணெண்ணெய் ஊத்தப் போனார். அப்போது அங்கு வந்த போலீசார், வெண்ணிலாவை தடுத்து நிறுத்தி விஜய்க்கு போன் செய்து கோயிலுக்கு வரவைத்தார்கள். கோயிலுக்கு வந்த விஜய் இடம் போலீசார் விசாரித்தார். அப்போது வெண்ணிலா, உங்கள் சித்தப்பா தான் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.

எங்களிடமிருந்த ஃபோன் எல்லாம் பிடுங்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்றெல்லாம் அழுது புலம்பி இருந்தார். விஜயா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் பேசி இருக்கும் வீடியோவை பார்த்த காவிரியின் குடும்பத்தினர் ஷாக் ஆனார்கள். பின் வீட்டில் உள்ள காவிரியின் பாட்டி, அத்தை இருவருமே காவிரி- விஜய் சேர்த்து வைப்பதை பற்றி பேசி இருந்தார்கள். அவருடைய அம்மாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காவிரியும் அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆனார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் விஜய் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீஸ், உங்களுக்கு ஏதாவது பணம் வேணும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொன்னார். இதனால் வெண்ணிலா கோபப்பட்டு போலீஸ் இடம் சண்டைக்கு போனார். இதுதான் சந்தர்ப்பம் என்று பசுபதி, விஜயின் சித்தப்பாவை உள்ளே வர சொன்னார். இன்னொரு பக்கம் காவிரியை சந்திக்க அவருடைய மாமா குமரன் வந்திருந்தார். அப்போது அவர், உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று சொன்னார். காவிரி தேவையில்லை என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் வீட்டின் ஹவுஸ் ஓனர் காவிரியின் அம்மாவிடம் விஜய் -வெண்ணிலா விவகாரத்தை பற்றி பேசினார். அவர்களுமே, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நீங்க எது பேசுவதாக இருந்தாலும் விஜய்யிடம் பேசுங்கள் என்று சொல்லி அனுப்பி இருந்தார். கடைசியில் கோவிலில் விஜயின் சித்தப்பா, வெண்ணிலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டை விட்டு துரத்தியது மட்டுமில்லாமல் அவர்களை ஆக்சிடண்ட் செய்ய சொன்னதும் விஜய் தான். அவர் சொல்லி தான் நான் செய்தேன் என்று ஒரு பொய்யான குற்றசாட்டை வைத்தார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆனார். விஜய் கோபப்பட்டு அவர் சித்தப்பாவிடம் சண்டைக்கு போனார். உடனே போலீஸ் இருவரையும் கைது செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் விஜய் மற்றும் அஜய் அப்பாவின் தரப்பு
நியாயத்தை விசாரிக்கிறார்கள். விஜய், தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்கிறார். அஜய் அப்பா, அவன் சொல்வதெல்லாம் பொய். டிராமா போடுகிறான் என்று பேசுகிறார். இன்னொரு பக்கம் காவிரி, விஜய் பார்க்க ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது விஜயின் தாத்தாவிற்கு ஃபோன் செய்து நடந்த விபரத்தை சொல்கிறார் காவிரி. பின் போலீஸ் ஸ்டேஷன் வந்த காவிரி, விஜயை பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது வந்த வெண்ணிலா, நீ எதற்கு விஜயிடம் பேசுகிறாய்? என்று கேட்கிறார். உடனே காவிரி, விஜயின் மனைவி நான் மட்டும் தான்.

சீரியல் ட்ராக்:

எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. யாருக்காகவும் விஜய் விட்டு தர மாட்டேன் என்று பேசுகிறார்.
இதனால் வெண்ணிலா கோபப்பட்டு காவிரியிடம் சண்டைக்கு போகிறார். பின் காவிரி- வெண்ணிலா இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது வந்த போலீஸ், அவர்களின் சண்டையை நிறுத்தி பஞ்சாயத்து விசாரிக்கிறார். இரு தரப்பிலுமே மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்கிறார்கள். உடனே போலீஸ், விஜய் -அஜய் அப்பாவை தவிர எல்லோரையும் வெளியே போக சொல்லி விடுகிறார். பின் காவிரி வரவில்லை என்று அவருடைய வீட்டில் இருந்து போன் செய்தார்கள். காவிரியும் என்னவோ சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full