காவிரியின் அம்மாவிடம் சண்டைக்கு போன விஜய், காவிரி எடுக்க போகும் முடிவு என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வெண்ணிலா, நான் விஜயின் மீது வைத்திருந்த காதலை விட நீ வைத்திருந்த காதல் தான் உண்மையானது. நீ ஊரை விட்டு கிளம்ப மாட்டாய் என்று நினைத்தேன். நான் உங்கள் இருவரையும் பிரிக்க மாட்டேன். நீங்கள் ரெண்டு பேருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதெல்லாம் கேட்டு காவிரிக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. பின் வெண்ணிலா, விஜய்- காவேரி இருவரையும் சேர்த்து வைத்து விட்டு தன்னுடைய மாமாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரியை பார்த்து அவருடைய அம்மா ஷாக் ஆனார். பின் காவிரி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார்.
விஜய், காவிரி அம்மாவிடம் பேசி இருந்தார். உடனே கோபப்பட்டு அவர் விஜயிடம் கத்தி சண்டை போட்டார். அதற்குப்பின் இன்னொரு வெர்சனில் விஜய் வீட்டிற்குள் வந்து ரொம்ப ஜாலியாக இங்கிலீஷில் பேசி காவிரியை அழைத்தார். அவருடைய மாமியாரும் ஜாலியாக இங்கிலீஷில் பேசி காவிரி- விஜய் இருவரையும் அனுப்பி வைத்தார். இதையெல்லாம் நினைத்து பார்த்து காவிரி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அதற்குப்பின் விஜய்க்கு போன் செய்து காவிரி பேசினார்.
மகாநதி:
அப்போது காவிரி, எங்கள் அம்மா அனுப்பவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு விஜய், உன்னை தூக்கிக் கொண்டு வந்து விடுவேன் என்றார். இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி, சித்தி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜயின் பாட்டி, காவிரி இந்த வீட்டுக்கு வந்தால் மீண்டும் பசுபதியால் பிரச்சனை வரும். அதனால் விஜய்- காவிரி இருவரையும் சேர விடக்கூடாது. இனி விஜய்யின் வாழ்க்கையில் காவிரி வேண்டாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். மறுநாள் காலையில் காவிரி, விஜய் தன்னை அழைத்துச் செல்வார் என்று பயங்கரமாக ரெடியாகி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் விஜய், காவிரியை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி வீட்டில் எல்லோரிடமும் பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். பின் விஜயின் பாட்டி காவிரிக்கு போன் செய்து கோவிலுக்கு வர வைத்தார். அப்போது காவிரியிடம் விஜயின் பாட்டி, நீ விஜயுடன் சேர்ந்து வாழ நினைக்கிறாயா? அந்த எண்ணத்தை மாற்றிக்கொள். உன்னால்தான் என் பேரனுக்கு இவ்வளவு பிரச்சனை. உன்னால் மீண்டும் பசுபதி என் பேரனுக்கு தொந்தரவு தருவான். தயவு செய்து விஜயின் வாழ்க்கையை விட்டு சென்று விடு என்றெல்லாம் திட்டி இருந்தார். அதனால் காவிரி எதுவும் பேச முடியாமல் அழுதார். இன்னொரு பக்கம் காவிரியின் வீட்டிற்கு சென்ற விஜயின் சித்தி, உங்கள் மகளை என் பையனுடன் சேர்த்து வைக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட காவிரியின் அம்மா, என் மகள் உங்கள் பையனிடம் பேசமாட்டாள். உங்கள் பையனும் என் மகளை பார்க்க வர வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாட்டி, சித்தி இருவருமே எதுவும் நடக்காதது போல் அமைதியாக இருந்தார்கள். அப்போது சந்தோஷத்தில் விஜய், காவிரியை நான் அழைத்து வருகிறேன். ஆர்த்தி எடுத்து வையுங்கள் என்றார். ஆனால், பாட்டி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். விஜய் சென்ற பிறகு தாத்தா, காவிரி வருவதில் உனக்கு சந்தோசம் இல்லையா? கேட்டார். அதற்கு பாட்டி, ஆமாம் அவள் விஜய்க்கு தேவை இல்லை என்று சொன்னார்.
https://www.youtube.com/watch?v=DBji139ZREc
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் விஜய், நான் காவிரியை என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்கிறார். உடனே காவிரி அம்மா, அதெல்லாம் நடக்காத விஷயம். தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்கள் என்கிறார். அதற்கு விஜய், காவிரி இல்லாமல் நான் இங்கு இருந்து போக மாட்டேன். நானும் காவிரியும் எப்படி வாழ்ந்தோம் என்று தெரியுமா? காவிரியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கேட்கிறார். ஆனால், காவிரி காவிரியின் அம்மா முடியாது என்று அடம் பிடிக்கிறார். காவிரியும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.