பசுபதியை அடி வெளுத்து வாங்கும் விஜய்,நிவின்,குமரன்- அடுத்து என்ன? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் குமரன் அம்மா, நான் இனிமேல் அவர்களை பற்றி பேச மாட்டேன் என்றார். இன்னொரு பக்கம் கங்கா, காவிரி நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு அவருக்கு போன் செய்து பேசி இருந்தார். காவிரி, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நன்றாகிவிடும். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி மொபைலில் அம்மா போட்டிருந்தால் குழந்தைக்கு பிரச்சனையாகுமா? என்பதை பற்றி வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை போட்டு இருந்தால் குழந்தை பிறந்தவுடன் நோய் வாய் பட்டு இறந்து விடும் என்று சொல்லப்பட்டது. இதை பார்த்தவுடன் காவேரி ரொம்ப எமோஷனாக கதறி அழுதார். விஜய் ஆறுதல் சொல்லியுமே அவர் கேட்கவில்லை.
விஜய் எவ்வளவோ ஆறுதல் சொல்லியுமே காவிரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதையே நினைத்து புலம்பி கொண்டிருந்தார். ஏதேதோ செய்து விஜய், காவேரியை சமாதானம் செய்து விட்டார். அதற்குப் பின் விஜய், காவிரியை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கங்காவின் மாமியார், யாரோ அங்கிருக்கிறார் என்று கத்தினார். உடனே விஜய் பதறி அடித்துக் கொண்டு உள்ளே போய் நடந்ததை காவிரியிடம் சொன்னார். பின் யாருக்கும் தெரியாமல் விஜய் ஒளிந்து கொண்டார். இன்னொரு பக்கம் கங்காவின் மாமியார், கத்தியதில் காவிரி அம்மா, வெளிய வந்து விசாரித்தார்.
மகாநதி சீரியல்:
இங்கு இருந்த யாரோ ஒருவர் காவிரி ரூமுக்கு சென்று விட்டார் என்று புலம்பி இருந்தார். உடனே காவிரியின் அம்மா ரூம் முழுக்க தேடினார். காவிரி, இங்கு யாருமே இல்லை. நீங்கள் பேய் பார்த்து பயந்து இருப்பீர்கள் என்று கங்காவின் மாமியாரை பயமுறுத்துகிறார். எல்லோரும் சென்றதற்குப் பின் விஜய் வந்தார். மறுநாள் காலையில் காவிரியின் முகத்தில் அம்மை குறைந்து இருந்தது. இதை பார்த்த அவருடைய அம்மா, தண்ணி ஊற்றி விடலாம் என்றார். அதற்குப்பின் காவேரி- விஜய் இருவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் காவிரி, விஜய் இருவருமே ஹாஸ்பிடல் போனார்கள். அங்கு டாக்டர், காவிரிக்கு ஸ்கேன் செய்தார். அப்போது குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்று காவிரி- விஜய் இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். ஆனால், டாக்டர் எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொன்னார்கள். இதனால் காவேரி- விஜய் சந்தோஷப்பட்டார்கள். பின் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் பசுபதி காவிரி- விஜயை பார்த்து விட்டார். உடனே பசுபதி, போலீஸ்க்கு போன் செய்து விஜய் இருக்கும் இடத்தை சொன்னார்கள். காவிரி- விஜய் கார் ஓட்டி கொண்டு வரும்போது பின்னாடியே போலீசும் துரத்தி வந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
இதனால் விஜய் என்ன செய்வதென்று புரியாமல் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்று விட்டார். அப்போது காவிரி, நீங்கள் இறங்கி விடுங்கள். நான் போலீசை சமாளிக்கிறேன் என்று வண்டி ஓட்டி வந்தார். பின் காவிரி வண்டியை தடுத்து நிறுத்திய போலீஸ், விஜய் எங்கே? என்று விசாரித்தார்கள். காவிரி, எனக்கு தெரியாது. நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வருகிறேன் என்று சொன்னார். உடனே பசுபதி, இவர்கள் இருவரும் வருவதை நான் பார்த்தேன். பொய் சொல்கிறார் என்றார். காவிரி, எனக்கு அம்மை போட்டு இருக்கிறது. அதனால் யாரையுமே கூப்பிடாமல் தான் ஹாஸ்பிடலுக்கு வந்தேன் என்று சொன்னார். இதனால் போலீஸ், காவிரி சொன்னதை நம்பி அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் காவிரி, ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொன்னால் நீ தப்பித்து விடுவாய். இல்லை என்றால் மூன்று சூப்பர் ஹீரோவும் உன்னை பொளந்து கட்டப் போகிறார்கள் என்று பசுபதியை மிரட்டி விட்டு சொன்னார்.
https://www.youtube.com/watch?v=yjl8Mz3rp9o
சீரியல் ப்ரோமோ :
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பசுபதி இருக்கும் இடத்தை பற்றி காவிரி, விஜய் இடம் சொல்கிறார். பசுபதி வரும் வழியில் குமரன் வருகிறார். குமரன், பசுபதியை பார்த்தவுடன் சண்டை போடுகிறார். பசுபதி குமரனை தள்ளிவிட்டு தப்பிக்கும்போது விஜய் வந்து நிற்கிறார். அந்த சமயம் பார்த்து நிவினும் வந்து விடுகிறார். மூன்று பேருமே சேர்ந்து பசுபதியை புரட்டி எடுக்கிறார்கள். மூன்று பேரிடம் இருந்தே பசுபதி தப்பித்து ஓடுகிறார். அவர்களுமே விடாமல் துரத்தி செல்கிறார்கள்.