விஜய்யை கோவிலுக்கு வரவைக்க வெண்ணிலா செய்யும் வேலை, யமுனா மீது கோபப்படும் நிவின் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜய், அஜய்யை அழைத்து வெண்ணிலா விஷயமாக பேசி இருந்தார். ஆனால், அஜய் எனக்கு எதுவுமே தெரியாது என்று டிராமா போட்டார். கோபத்தில் விஜய், இதுவரை நீங்கள் இந்த வீட்டில் செய்தவரையும் போதும், வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என்று சொன்னவுடன் ராகினி ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார். ரொம்ப ஏளனமாக விஜய்யும், அவர் குடும்பத்தையும் பேசி இருந்தார். பின் விஜய், தாத்தா, பாட்டி மூவருமே சேர்ந்து அஜய்- ராகினி இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் நிவின், காவிரியை பார்க்க சென்றிருந்தார். அப்போது நிவின், விஜய் தன்னிடம் பேசிய விஷயமெல்லாம் சொன்னார்.
அதற்கு காவிரி, சீக்கிரமாகவே எங்கள் பிரச்சனை தீர்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து கங்கா- யமுனா இருவருமே அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு நிவினை பார்த்தவுடன் யமுனா பயங்கரமாக கோபப்பட்டார். அப்போது காவிரி, தனக்கு புது ஆர்டர் கிடைத்தது பற்றி சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், யமுனா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காவிரி மீது தான் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பசுபதி, வெண்ணிலாவை அழைத்து விஜயை திருமணம் செய்து கொள்ளுவது பற்றி தேவையில்லாமல் அவருக்கு யோசனை தந்தார்.
மகாநதி சீரியல்:
பசுபதி, நீ எப்படியாவது அழுது டிராமா செய்து விஜயை திருமணத்திற்கு சம்மதிக்க வை. அது உன் கையில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் வெண்ணிலாவும் சரி என்றார். இன்னொரு பக்கம் விஜய், நிவினை சந்தித்து பேசி இருந்தார். அப்போது நிவின், வெண்ணிலா காவிரியிடம் செய்த பிரச்சனையை பற்றி பேசி இருந்தார். அதற்கு விஜய், நான் கூடிய சீக்கிரத்திலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு செய்கிறேன். எதுவாக இருந்தாலும் நானும் காவிரியும் சேர்ந்து வாழ்வதில் எந்த மாற்றமும் இல்லை என்பர் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் காவிரியின் அம்மா, நீ தயவு செய்து இந்த தாலியை கழட்டி விடு.
கடந்த வாரம் எபிசோட்:
விஜய்க்கு விவாகரத்து கொடுத்துவிடு. நீ எப்படி எதுவுமே நடக்காது போல் இருக்கிறாய். என்னால் முடியவில்லை என்று பேசி இருந்தார். உடனே காவிரி, என் பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று சொன்னார். கடைசியில் விஜயின் வீட்டிற்கே வெண்ணிலா வந்து விட்டார். அப்போது விஜய் கோபப்பட்டு கத்தி இருந்தார். வெண்ணிலா, நீ தான் என்னுடைய புருஷன். நாளை உனக்கும் எனக்கும் கோவிலில் கல்யாணம் என்றெல்லாம் அழுது புலம்பி டிராமா செய்தார். அதற்கு விஜய், அது முடியாது. என்றைக்குமே காவிரி தான் என் மனைவி. உனக்கு நான் பாவம் பார்த்தது தான் தப்பு. உன்னை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று கோபப்பட்டு கத்தி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெண்ணிலா, எனக்கு கல்யாணம் செய்ய வேண்டும். மாப்பிள்ளை நீதான். நாளை உனக்கும் எனக்கும் கோயிலில் தான் கல்யாணம். உன்னை எப்படி வர வைக்கணும் என எனக்கு தெரியும் என்று சவால் விடுகிறார். ஆனால், விஜய் அது எல்லாம் கண்டு கொள்ளாமல் காவிரி தான் தன்னுடைய மனைவி என்பதில் உறுதுணையாக இருக்கிறார். மறுநாள் காலையில் வெண்ணிலா திருமண கோலத்தில் தயாராகி கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார். மீடியாக்கள் வெண்ணிலாவிடம் பேட்டி எடுக்கிறார்கள். அப்போது வெண்ணிலா, விஜய் கண்டிப்பாக வருவார். விஜய் என்னைத்தான் காதலிக்கிறார். அவரை வர விடாமல் காவிரி தடுக்கிறார் என்றெல்லாம் காவிரி குடும்பத்தின் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்துகிறார்.
சீரியல் ட்ராக்:
இதை டிவியில் பார்த்த காவிரி பெரிதாக கண்டுகொள்ளாமல் பொருட்காட்சிக்கு கிளம்ப பார்க்கிறார். அப்போது அவர் அம்மா, நீ வெளியில் போக வேண்டாம். வீட்டிலேயே இரு என்கிறார். ஆனால், காவேரி அதை பார்க்காமல் பொருட்காட்சிக்கு கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் டிவியில் வெண்ணிலா பேசுவதை பார்த்து கோபப்பட்டு நிவின், வெண்ணிலாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த யமுனா, உங்களுக்கு நிஜமாகவே விஜய்- காவேரி சேர்வதில் சந்தோஷமா? என்று கேட்கிறார். அதற்கு நிவின், ஆமாம். உன்னை போல் என்னால் அவர்களை பிரித்த குற்ற உணர்ச்சியில் இருக்க முடியாது. அவர்களை சேர்த்து வைக்க தான் முயற்சி செய்வேன் என்கிறார். அதற்கு யமுனா, நிவினையும்-காவிரியும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசுகிறார். இதைக் கேட்டவுடன் கோபப்பட்டு நிவின், யமுனாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.