காவிரிக்கு நடத்தும் வளைகாப்பால் வன்மத்தில் கங்கா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வீடியோவில் சொன்னார்கள். இதை கேட்டு கங்கா ரொம்பவே எமோஷனல் ஆனார். இதைப் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி கங்கா புலம்பி இருந்தார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கங்காவிற்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால் கங்காவின் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. குமரனும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கங்கா குமரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்டில் காவிரி, வேலைக்குப் போன விஷயத்தைப் பற்றி கேட்டார். அதற்கு விஜய், வேறு இடம் எங்காவது பார்க்கலாம் என்றார். உடனே காவிரி, புது பிசினஸ் தொடங்கலாம். அதற்கான பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஆனால், விஜய் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த சமயம் வந்த குமரன், கங்கா என்னை ரொம்ப டார்ச்சல் செய்தார். அடிக்கிறார், உதைக்கிறார் என்றெல்லாம் புலம்பினார். உடனே விஜய், காவிரியுமே அப்படிதான் ரொம்ப கொடூரமாக என்னை நடத்துவாள் என்றெல்லாம் புலம்பினார்.
மகாநதி:
மறுநாள் விஜய்யை பார்ப்பதற்காக அவருடைய தாத்தா- பாட்டி இருவரும் வந்திருந்தார்கள். பாட்டி, காவிரி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. வழக்கம் போல காவிரியை குறை சொல்லிக் கொண்டே தான் இருந்தார். பின் தாத்தா, காவிரிக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசினார். வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்றார்கள். பின் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? நாங்கள் இல்லையா? என்றெல்லாம் வழக்கம் போல காவிரியை திட்டிக் கொண்டிருந்தார். விஜய், தன் பாட்டியை சமாதானம் செய்ய நினைத்தார். ஆனால், அவர் கேட்கவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வளைகாப்பிற்கு தேவையான பொருட்களை எல்லாம் தாத்தா, பாட்டி வாங்கி வந்து காவிரியின் வீட்டில் வைத்துவிட்டு செல்கிறார்கள். அந்த சமயம் வந்த கங்காவிடம் சாரதா, விஜய் பாட்டி வந்து போன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். உடனே கங்கா, எனக்கு வளைகாப்பு இல்லையா? என்று கேட்கிறார். சாரதா, உனக்கு ஏழாம் மாதம் நடத்துகிறோம். இரண்டு பேருக்கும் சேர்ந்து நடத்துகிறோம் என்கிறார். ஆனால், கங்கா ஒத்துக் கொள்ளவே இல்லை. எனக்கு ஐந்தாம் மாதமே நடத்த வேண்டும். இல்லை என்றால் வளைகாப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் கடையில் கங்கா வளைகாப்பு நினைத்து கோபமாக இருக்கிறார். அந்த சமயம் வந்த யமுனாவிடம் வீட்டில் வளைகாப்பு பற்றி பேசிய விஷயத்தை எல்லாம் கங்கா சொல்கிறார். யமுனா, வழக்கம் போல் காவிரியை தான் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின் காவிரி -விஜய் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரிக்காக வாங்கி வைத்த முருகர் செயினை விஜய் போட்டு விடுகிறார். இன்னொரு பக்கம் கங்கா கோபமாக இருக்கிறார். குமரன் எவ்வளவோ சமாதானம் செய்துமே கங்கா கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.