காவிரி-கங்கா இடையே விரிச்சலை உருவாக்கும் சாரதா, விஜய் சொன்ன வார்த்தை - மகாநதி

By subhashini · 8/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா, எல்லாத்துக்குமே சாரி. நான் தான் கேவலமானவள் என்றெல்லாம் சொன்னார். யமுனா திரிந்து விட்டால் என்று எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். நிவின், அவள் திருந்த மாட்டாள் என்று உள்ளுக்குள் நினைக்கிறார். அப்போது விஜய், காவிரி கர்ப்பமான விஷயத்தை முதலில் நிவினுக்கு தான் தெரியும் என்று சொன்னவுடன் வழக்கம் போல் மீண்டும் யமுனா சந்தேகப்பட்டார்.
விஜய், குமரன், நிவின் மூன்று பேருமே சரக்கு அடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம் சாரதா, காவிரியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டு பார்த்து பார்த்து செய்தார். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அதோடு தூங்கும் ரூமை கூட இருவருக்கும் வித்தியாசமாக பார்த்து கொடுத்தார். அதற்குப்பின் நிவின் வீட்டுக்கு கிளம்பி விட்டார். குமரன், விஜய் இருவருமே குடித்துவிட்டு கொஞ்சம் ஜாலியாக அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது விஜய், எங்களுக்காக ஸ்பெஷல் ஆக தயார் செய்ய வேண்டாம். நீங்கள் எப்போதும் போல இருங்கள்.

மகாநதி:

எங்களுக்காக யாரும் உங்களின் ப்ரைவேசி விட வேண்டாம் என்று சொல்லி விஜய் குடியிருந்த போர்சனுக்கே இருவரும் சொன்னார்கள். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு வந்த உடனே வழக்கம்போல சண்டை வாங்க யமுனா காத்துக் கொண்டிருந்தார். அப்போது யமுனா, காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை உங்களுக்கு எப்படி முதலில் தெரியும். நீங்கள் ஏன் குமரன் மாமாவிடம் சொல்லவில்லை என்றெல்லாம் கேட்டார். அதற்கு நிவின், என்னைக்கும் நீ திருந்த மாட்ட. உன்னிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.

கடந்த வாரம் எபிசோட்:

காவேரி- விஜய் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் காவிரி வீட்டில் விஜயை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார்கள். அந்த சமயம் பார்த்து விஜயினுடைய தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்தார்கள். இருவருமே காவிரியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள். உடனே சாரதாவும் சம்மதித்தார். பின் விஜய், தன் தாத்தா பாட்டியை அழைத்து சென்று நான் இங்கே இருக்கிறேன். நான் அங்கு வரவில்லை என்றார். இதை கேட்டு தாத்தா- பாட்டி இருவரும் ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரி அங்கு வந்தாலும் வீட்டைப்பற்றி தான் யோசித்து கொண்டு இருப்பார். அதோடு நான் கொஞ்ச நாளைக்கு இவர்களுடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு தாத்தா பாட்டி இருவருமே வேதனைப்பட்டு சென்று விட்டார்கள். இன்னொரு பக்கம் சாரதா, விஜய்க்காக பார்த்து பார்த்து சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கங்கா, குமரனுக்கு பிடித்த சாப்பாட்டை செய்ய சொல்ல, சாரதா அப்புறமாக செய்கிறேன் என்றார். அதோடு வீட்டு வேலைகள் எல்லாம் குமரனை செய்ய சொல்கிறார். இதெல்லாம் பார்த்து கங்காவிற்கு கடுப்பாகிறது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் கங்கா- குமரன் இருவருமே தங்களுடைய கடைக்கு செல்கிறார்கள். அப்போது மளிகை சாமானை வாங்க குமரன் போகிறார். உடனே கங்கா தடுத்து நிறுத்தி அவர்களே வாங்கிக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்கிறார். இதெல்லாம் குமரனுக்கு புரியவே இல்லை.
இன்னொரு பக்கம் விஜய், வேலைக்கு செல்வதற்காக கம்பெனிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது காவிரி, நீங்கள் உங்களுடைய கம்பெனியை பார்க்கலாம் என்கிறார். அதற்கு விஜய், இப்போதைக்கு வேண்டாம், நான் தனியாக வேலைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். அதையெல்லாம் தாத்தா பார்த்துக் கொள்வார் என்று காவிரியை சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full