காவேரிக்காக நடக்கும் விழா, கோபத்தில் சாரதாவை திட்டும் கங்கா - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி- விஜய் இருவரும் பாட்டியுடன் சந்தோஷமாக பேசினார்கள். இன்னொரு பக்கம் சித்தப்பா, கம்பெனியை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் தாத்தா வேண்டாம் என்றார். அதற்குப்பின் சித்தப்பா சொன்னதை தாத்தா விஜய்யிடம் சொன்னார். அதனால் விஜய்-காவிரி இருவருமே கம்பெனி பொறுப்பை எடுப்பதை பற்றி யோசித்தார்கள்.
காவிரி தன்னுடைய ரூமிற்கு சென்றவுடன் பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது விஜய் ரூமிற்குள் வந்தார். பின் இருவருமே ரொம்ப எமோஷனலாக தங்களுடைய பழைய நினைவுகளை பேசி சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் பாட்டி, காவிரிக்கு 5 மாதம் ஆகிவிட்டதால் கேலண்டரில் தேதி பார்த்து பூ முடிப்பதை பற்றி தன்னுடைய மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மகாநதி:
பின் சாரதாவிற்கு ஃபோன் செய்த பாட்டி, காவிரிக்கு பூ முடிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். சாரதா, எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா விஷயத்தையும் செய்ய முடியும் என்று சொன்னார். அதற்கு பாட்டி, நீங்கள் வந்தால் மட்டும் போதும். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். மறுநாள் காலையில் விஜய்- காவிரி இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். அப்போது வீடு முழுக்க பூவால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் அலங்காரம் செய்திருப்பதை பார்த்து விஜய், காவிரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அப்போது பாட்டி, உனக்கு ஐந்தாவது மாதம். பூச்சூடும் விழா நடத்துகிறோம். உங்கள் வீட்டில் இருந்தும் வருகிறார்கள். எல்லா ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொல்கிறார்கள். பின் விஜய்- காவிரி இருவருமே தயாராக போகிறார்கள். இன்னொரு பக்கம் சாரதா, தன்னுடைய மகளுக்காக பார்த்து பார்த்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்து கோபப்பட்ட கங்கா, தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் சாரதா வீட்டில் எல்லோருமே காவேரியின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். விஜய் அவர்களை கவனிக்கிறார். அதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வருகிறது. பின் காவேரி ரூமில் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து யமுனா, கங்கா இருவரும் முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். பின் யமுனா, எனக்கும் மேக்கப் போடணும் என்று சொன்னவுடன் காவேரி போட சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.