விஜய் செய்த வேலையால் கொந்தளிக்கும் கங்கா, பதறி அடித்து கொண்டு வரும் பசுபதி - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கங்கா, யமுனா ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வழக்கம்போல் இருவருமே விஜய், காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து யமுனாவின் வீட்டிற்கு நிவின் அம்மா வந்து விட்டார். ஆனால், யமுனா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் நிவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்.
சாரதா, விஜய், காவிரி மூவருமே நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய்- குமரன் இருவருமே தனியாக நின்று பேசுவதை பார்த்து கங்கா கோபப்பட்டார். அதைப்பற்றி கங்கா, காவிரியிடமும் கேட்டார். ஆனால், காவேரி எதுவும் தெரியாது என்றார். இன்னொரு பக்கம் ராகவை நிவின் அம்மா அழைத்து வந்தார். அப்போது நிவின் தன்னுடைய அம்மாவை வேறு ஒரு காரில் அனுப்பி ராகவை தூக்கி விட்டார். விஜய் இருக்கும் இடத்திற்கு ராகவை அழைத்துக் கொண்டு நிவின்-குமரன் இருவருமே வந்தார்கள்.
மகாநதி:
ராகவ் போன் செய்யவில்லை என்று பசுபதி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின், பசுபதிக்கு போன் செய்து ராகவை கடத்திய விஷயத்தை சொன்னார். இதனால் பசுபதி பயங்கரமாக கோபப்பட்டு கத்தினார். உடனே விஜய், காவிரி குடும்பத்திற்கு நீ பிரச்சனை தரக்கூடாது என்று சொல்லியும் நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார். ஒழுங்கு மரியாதையாக கொடைக்கானல் பத்திரத்தை நீ எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரவேண்டும் இல்லை என்றால் உன் மகனை என்ன செய்வோம் என்று எங்களுக்கே தெரியாது என்றார். இதனால் பசுபதி ரொம்பவே பதறிப் போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன் போன் எடுக்காததால் கங்கா வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். உடனே விஜய்க்கு போன் செய்த காவிரி, எங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். அப்போது விஜய், ராகவை கடத்திய விஷயத்தைப் பற்றி சொல்கிறார். ஆரம்பத்தில் பதறிய காவிரி வீட்டை மீட்க தான் இப்படி விஜய் செய்தார் என்று தெரிந்தவுடன் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் கங்கா, குமரன் எங்கே என்று கேட்கிறார். அப்போது காவிரி, நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் கோபப்பட்டு கங்கா, விஜய் - காவிரியை திட்டுகிறார். காவிரி சமாதானம் செய்தும் கங்கா கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
பின் கங்கா, குமரனுக்கு போன் செய்து பேசுகிறார். குமரனும் நடந்த விஷயத்தை சொல்கிறார். கங்கா திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். ஆனால், குமரன் கேட்காமல் போனை வைத்து விடுகிறார். இதனால் கங்கா, விஜய் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அதற்குப்பின் பசுபதி சென்னை வந்து கொண்டிருக்கிறார். அப்போது போன் செய்த விஜய், சாரதா அத்தை வீட்டிற்கு கிளம்பு. பத்திரத்தை எடுத்து வந்தாயா? என்றெல்லாம் கேட்க, பசுபதியும் ஆமாம் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.