வேதனையில் குமரனிடம் மன்னிப்பு கேட்ட கங்கா, பசுபதியால் காவிரி ஏற்படும் விளைவு - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன் ஒரு வழியாக வளைகாப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விட்டார். குமரன் பார்த்தவுடன் கங்கா பயங்கரமாக கோபப்பட்டார். பின் தயாராகி மேடைக்கு வந்த குமரனை பார்த்து கங்கா கோபப்பட்டார். உடனே கங்கா, மாலையை கீழே தூக்கி போட்டு பயங்கரமாக கத்தி சண்டை போட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே கங்காவை அமைதியாக இருக்க சொன்னார்கள். பின் குமரன், உனக்கு ஆசைப்பட்ட ஒட்டியானம் வாங்க தான் நான் வீட்டுக்கு வராமல் வேலை செய்தேன்.
என்னை மன்னித்து விடு கங்கா. என்னால் முடிந்த வரை செய்கிறேன். ஆனால், உன்னுடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்று ரொம்ப எமோஷனாக பேசி இருந்தார். குமரன் அம்மா, கங்காவை திட்டினார். பின் குமரன் பேசியதை கேட்டு கங்கா அமைதியாகி விட்டார். அதன் பின் கங்காவிற்காக தான் வாங்கி வந்த ஒட்டியாணம் போட்டு விட்டு அழகு பார்த்தார் குமரன். பின் வளைகாப்பு நடந்தது. கங்காவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது.
மகாநதி
எல்லோருமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சந்தோசமாக இருந்தார்கள். பின் குமரன், நீ நினைத்தது போல் என்னை மாற்றிக் கொண்டு வாழணும்னு நினைக்கிறேன். ஆனால், நீ என்னை ரொம்பவே அவமானப்படுத்தினாய். இருந்தாலும் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என்று ரொம்ப எமோஷனாக தன் மனதில் இருக்கும் வலியையும் காதலையும் சொன்னார். இதையெல்லாம் கேட்டு கங்கா குற்ற உணர்ச்சியில் அமைதியாக நின்றார். வீட்டில் உள்ள எல்லோருமே குமரனுக்கு ஆறுதல் சொன்னார்கள். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கங்கா செய்த தவறுக்காக திட்டிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன், கடையில் இருந்த மீதி வேலையை முடித்துவிட்டு அங்கு வேலை செய்தவர்களுக்கு பணத்தையும் கொடுத்து விடுகிறார். நான்கு நாட்களாக தூக்கம் இல்லாததால் அங்கேயே குமரன் படுத்து தூங்கி விடுகிறார். அந்த இடத்திற்கு கங்கா, காவேரி, விஜய் மூவருமே வருகிறார்கள் குமரன் தரையில் படுத்து தூங்குவதை பார்த்து கங்கா ரொம்பவே கஷ்டப்படுகிறார். பின் குமரன் அருகில் உட்கார்ந்து கங்கா, தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது எழுந்த குமரன் கங்காவிடம் விசாரிக்கிறார். அப்போது கங்கா, மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருக்கிறார். பின் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய்- காவேரி இருவரும் நடந்து செல்கிறார்கள். அப்போது காவிரி, ன்னைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார். பின் விஜய் ஐஸ்கிரீம் வாங்க கடைக்குள் சென்று விடுகிறார். அப்போது பசுபதி காரை விட்டு காவேரி மீது மொத போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.