ரவுடிகளின் அட்டகாசத்தால் கங்காவிற்கு நேர்ந்த சோகம், பதறி போகும் சாரதா குடும்பம் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், உங்களுக்கான தண்டனை கொடுக்கப்படும் என்று போலீசில் கம்பளைண்ட் கொடுத்து விட்டார். பின் விஜய் வீட்டிற்கு வந்த போலீஸ், கிருஷ்ணா- முத்து மலர் குடும்பத்தை கைது செய்து செல்கிறது. அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். காவிரி தன் தந்தையை தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டார்.
சாரதா, தன் கணவரை தவறாக புரிந்து கொண்டோமே என்று நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார். கங்கா, யமுனா எல்லோருமே சாரதாவிற்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் சாரதா மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி, சித்தி இருவரும் முத்துமலர் குடும்பம் செய்த பித்தலாட்ட வேலையை நினைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது சித்தப்பா, இது தான் சந்தர்ப்பம் என்று மீண்டும் பசுபதியால் விஜய்க்கு பிரச்சனை வரும் என்றார்.
மகாநதி:
அதற்குப்பின் நிவின், யமுனா இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். நிவின் கிளம்பிய உடன் பசுபதியின் ரவுடி ஆட்கள் விஜய் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தார்கள். கேள்வி கேட்ட தாத்தாவையும் அடிக்கிறார்கள். பின் கோபத்தில் கங்கா அவர்களை திட்டி வெளியே போக சொன்னார். அப்போது ஒரு ரவுடி, கங்காவை கீழே தள்ளி விடுவதால் அவருடைய வயிற்றில் அடிபட்டு வருகிறது. வலி தாங்க முடியாமல் கங்கா கத்தினார். சாரதா ரொம்பவே பதறிப் போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பசுபதி அனுப்பிய ரவுடிகள் கங்காவை கீழே தள்ளிவிட்டதால் அவருக்கு
வயிற்றில் அடிபட்டு விடுகிறது. வலி தாங்க முடியாமல் கங்கா ரொம்பவே கத்துகிறார். சாரதா புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து விஜய், காவிரி இருவரும் வீட்டிற்கு வருவதால் அந்த ரவுடிகள் ஒளிந்து கொள்கிறார்கள். கங்காவிற்கு ப்ளீடிங் ஆகுவதால் காவேரி ரொம்பவே பதறிப் போகிறார். பின் அந்த ரவுடிகள் விஜயை தாக்குகிறார்கள். விஜய் அந்த ரவுடிகள் எல்லாம் அடித்து துரத்திவிட்டு கங்காவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போகிறார்.
சீரியல் ட்ராக்:
கங்காவை செக் செய்த டாக்டர், குழந்தை அம்மா இருவரும் கிரிட்டிக்கல் ஸ்டேஜில் இருக்கிறார்கள். சீக்கிரமாகவே குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கணும் என்று சொல்கிறார். இதைக்கேட்டு சாரதா எமோஷனல் ஆகி மயங்கி விழுகிறார். பின் சாரதா குடும்பத்தில் எல்லோருமே கங்காவின் நிலைமையை நிறுத்தி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கங்காவிற்கு ஆப்ரேஷன் நடக்கிறது. இன்னொரு பக்கம் பசுபதி செய்த வேலையை நினைத்து தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருமே கவலைப்பட்டிருக்கிறார்கள். விஜய்யின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.